இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Lanka Ride தேசிய சைக்கிள் சவாரி நேற்று வெள்ளிக்கிழமை (16) காலை 9.00 மணிக்கு கொழும்பு லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு முன்பாக ஆரம்பமாகி கண்டியில் நிறைவடைந்தது.
இந்நிகழ்வில் நெடுஞ்சாலைகள், போக்குவரத்து மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் குமார் கமகே, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தலைவர் காமினி வருஷமான உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இராணுவம், விமானப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் இந்த சைக்கிள் சவாரியில் பங்கேற்றனர்.
நேற்று நிறைவடைந்த முதலாம் நாள் போட்டியில் முதல் 5 இடங்களை வென்றவர்கள் பின்வருமாறு ;
முதலாம் இடம்: எச்.டபிள்யூ.எம்.எஸ். பின்ந்து (இலங்கை இராணுவம்)
இரண்டாம் இடம்: ஏ.டி.எஸ். பெரேரா (இலங்கை இராணுவம்).
மூன்றாம் இடம் : தேஷான் கவிந்த
நான்காம் இடம்: சுரங்க ரணவீர.
ஐந்தாம் இடம்: சிதும் பூர்ண.
இந்த தேசிய சைக்கிள் சவாரியின் இரண்டாம் நாள் போட்டி கண்டியில் ஆரம்பமாகி அநுராதபுரத்தில் நிறைவடையும் . மூன்றாம் நாள் போட்டி அநுராதபுரத்திலிருந்து கொழும்பில் நிறையவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.