விமானச் சேவைகள் நிறுவன முன்னாள் தலைவர் ஹர்ஷ அபேவிக்ரம பதவி நீக்கம் தொடர்பில் விளக்கம்

விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரம பதவியிலிருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025.12.29ஆம் திகதி இலங்கை மகாபோதி சங்கத்தின் கடிதத் தலைப்பில் பாணகல உபதிஸ்ஸ தேரர், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அதில், கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்டிருந்த விசேட அனுமதிப்பத்திரம் டிசம்பர் 31ஆம் திகதியுடன் நிறைவடைவதால், அதனை அடுத்த வருடத்திற்கு நீடிக்குமாறு கோரியிருந்தார்.

தேரரின் சர்வதேச சமயப் பணிகளைக் கருத்திற்கொண்டு, அதனை அடுத்த வருடத்திற்கு நீடிக்குமாறு அந்தக் கடிதத்திலேயே குறிப்பொன்றை இட்ட அமைச்சர், மேலதிக நடவடிக்கைகளுக்காக அதனை முன்னாள் தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

விசேட அனுமதிப்பத்திரங்களை வழங்குவது தொடர்பாக முன்னர் ஏற்பட்ட சில அனுபவங்களை முன்னாள் தலைவர் அமைச்சருக்குத் தெளிவுபடுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அவர் கூறியதை ஏற்றுக்கொண்ட அமைச்சர், தகுந்த நிபந்தனைகளுடன் அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

அதற்கமைய, கடந்த 9ஆம் திகதியன்று பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு முன்னாள் தலைவரால் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தேரரின் கோரிக்கைக்கமைய இந்தக் கடிதம் ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்பட்டதுடன், இது தொடர்பாக அமைச்சருக்கும் முன்னாள் தலைவர் ஹர்ஷா அபேவிக்ரமவுக்கும் இடையே எந்தவித கருத்து முரண்பாடுகளும் ஏற்படவில்லை என அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையங்கள் மற்றும் விமானச் சேவைகள் நிறுவனத்தின் நிர்வாகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் சில காரணங்களுக்காகத் தலைவர் பதவி குறித்து தீர்மானம் எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக, கடந்த 21ஆம் திகதி அமைச்சருக்கும் ஹர்ஷா அபேவிக்ரமவுக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்படி, அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, பாணகல உபதிஸ்ஸ தேரருக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கும் முன்னாள் தலைவரின் பதவி நீக்கத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என அந்த அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது

manmu

பிரதேசசபையின் தவிசாளர் அச்சுறுத்துவதாக பிரதேச சபை உறுப்பினர் தெரிவிப்பு

March 4, 2026

தனது அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதேச சபையின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவும் எதிரான உறுப்பினர்களை அடிபணிய வைப்பதற்காகவும் பொலிஸில் பொய்யான

photo-collage.png (49)

தனியார் நிறுவன ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் Rebuilding Sri Lanka நிதியத்திற்கு நன்கொடை

March 4, 2026

அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கத்தின் Varun Beverages Lanka Pvt Ltd (Pepsi Cola Company) கிளையின் மற்றும் Royal

jail

கொழும்பு கிராண்ட்பாஸ் படுகொலைச் சம்பவம் : 6 சந்தேக நபர்கள் கைது!

March 4, 2026

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நபர் ஒருவரை பாராங்கத்தியால் வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேக நபர்களை விசேட

hari

நிவாரண கொடுப்பனவை செலுத்தி முடிக்கும் காலத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது – பிரதமர்

March 4, 2026

தித்வா புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகானோருக்கு இழப்பீடு மற்றும் நிவாரண கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.இழப்பீடு வழங்கல் குறித்து பல்வேறு