போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, கடவுச்சீட்டு பெற்றதாக சஷி வீரவங்சவுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணை ஜூலை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (25) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஷி வீரவங்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.
உத்தியோகபூர்வ கடவுச்சீட்டொன்றைப் பெறுவதற்காக, 2010 அக்டோபர் 13 அன்று குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் போலி பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பம் சமர்ப்பித்த குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச். சமிந்த என்ற நபர் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறை சசி வீரவங்சவைக் குற்றம் சாட்டப்பட்டவராகக் கொண்டு இந்த வழக்கைப் பதிவு செய்துள்ளது.
வழக்கின் மேலதிக விசாரணை ஜூலை 24 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சாட்சிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.