சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் சென்னையில் உள்ள பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்குத் தொகுதியில் இடைத்தேர்தலைச் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சூழலில், லால்குடி தொகுதியில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (2,739 வாக்குகள்) வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், இன்று பனையூர் அலுவலகத்தில் விஜய்யைச் சந்தித்துப் பேசினார். திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய்க்கான மாற்று வேட்பாளராகக் களம் இறக்கப்பட்ட கு.ப.கிருஷ்ணனின் மகன் சிரஞ்சீவிதான், நேற்று விஜய்க்கான வெற்றிச் சான்றிதழைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வரும் இடைத்தேர்தலில் அனுபவம் வாய்ந்த கு.ப.கிருஷ்ணனை திருச்சி கிழக்கில் களம் இறக்க விஜய் ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
நாளை மறுநாள் (மே 7) முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவைப் பட்டியல் மற்றும் இடைத்தேர்தல் வியூகங்கள் குறித்துத் திருச்சி மண்டலப் பொறுப்பாளரான கு.ப.கிருஷ்ணனுடன் விஜய் நடத்திய இந்தச் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
#Vijay #TVK #TrichyEast #ByElection #KPKrishnan #PanaipurMeeting #BreakingNews #May6 #TNElectionResults2026 #ThalapathyVijay #PeramburMLA #NewGovernmentTN #VijayAsCM #TrichyPolitics #Lalgudi #LeemaRoseMartin #PoliticalStrategy #May7SwearingIn #VijayMakkalIyakkam #TNPoliticsUpdate_“`