விஜய் 2026 தேர்தலுக்கு பிறகு நடிப்பாரா ? இல்லையா ? என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் மீண்டும் படங்களில் நடிப்பதை பற்றி வதந்திகள் பரவி வருகின்றது. அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார் சினிமா பிரபலம் சித்ரா லக்ஷ்மணன்.
விஜய் ஜனநாயகன் என்ற படத்தோடு சினிமாவில் இருந்து ஓய்வு பெறவுள்ளார். அரசியலில் களமிறங்கியிருப்பதாலே விஜய் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சுமார் 250 கோடி வரை சம்பளம் வாங்கும் விஜய் திடீரென சினிமாவே வேண்டாம் என அரசியலுக்கு சென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. ஒரு சிலர் விஜய் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவார் என சொல்கின்றனர். அதற்காக விஜய் ஒரு சில இயக்குனர்களிடம் கதை கேட்டு இருப்பதாகவும் செய்திகள் பரவலாக பரவி வருகின்றன.
ஆனால் இந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை என சினிமா பிரபலம் சித்ரா லக்ஷ்மணன் தெரிவித்திருக்கின்றார். பல படங்களில் நடித்தும் பல படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கும் சித்ரா லக்ஷ்மணன் சமீபத்தில் இதுகுறித்து பேசியிருக்கிறார். என்னதான் அரசியலில் நுழைந்தாலும் அவ்வப்போது தங்களுக்காக ஒரு சில படங்களில் நடிக்குமாறு தொடர்ந்து தளபதியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர். விஜய்படங்களை பார்த்து வளர்ந்த அவர்களால் தளபதி இனி படங்களில் நடிக்கமாட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே தான் தொடர்ந்து விஜய்யை அவரின் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கூறி வருகின்றனர். ஆனால் விஜய் தன் முடிவில் உறுதியாக இருப்பதாகவே தெரிகின்றது.