சென்னை:
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை, நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு அரசியல் மற்றும் திரைத்துறையினரிடையே பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
சில தினங்களாக அமெரிக்கப் பயணத்தில் இருந்த கமல்ஹாசன் அண்மையில்தான் சென்னை திரும்பினார். சென்னை வந்ததும், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து, புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தம்பி விஜய்க்கு நேரில் வாழ்த்து தெரிவிப்பதற்காக நீலாங்கரை இல்லத்திற்குச் சென்றார். இந்தச் சந்திப்பின் போது, பல்வேறு நலிவடைந்த சூழலில் இருக்கும் தமிழ்த் திரைத்துறையின் வளர்ச்சிக்காக அரசின் ஆதரவைக் கோரி 6 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை முதல்வர் விஜய்யிடம் கமல்ஹாசன் வழங்கினார்.
முதல்வர் விஜய்யுடனான சந்திப்பு குறித்து கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அதில், “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியில் நீடித்தாலும், புதிய முதல்வருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்து திரைத்துறைக்காகக் குரல் கொடுத்த கமலின் அரசியல் பண்பை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
#KamalHaasan #VijayAsCM #KamalMeetsVijay #BreakingNews #May16 #TamilCinemaIndustry #TamilNaduPolitics #ThalapathyVijay #MakkalNeedhiMaiam #NeelankaraiResidence #MNM_Official #TVK_Government #NewEraTN #CinemaDemands #PoliticalEthics #StalinAlliance #GlobalTamils #TamilNews #VijayMakkalIyakkam #CM_Vijay_Official_“`