“மிதிகம லசா” என அழைக்கப்படும் வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர ஹேவத் என்பவரை சுட்டுக்கொலை செய்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை கைதுசெய்ய பல வீதிகளில் பொலிஸார் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“மிதிகம லசா” ஒக்டோபர் 22 ஆம் திகதி காலை 10.30 மணியளவில் வெலிகம பிரதேச சபை அலுவலகத்தில் இருக்கும் போது, கருப்பு நிற முகமூடிகளை அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர், அலுவலக அறைக்குள் நுழைந்து கதிரையில் அமர்ந்திருந்த “மிதிகம லசா” மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த “மிதிகம லசா” சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிதாரிகள் தப்பிச் செல்லும் காட்சிகள் சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ள நிலையில் அவர்கள் தப்பிச் சென்ற வீதிகளில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே பல்வேறு வீதிகளில் உள்ள சிசிரிவி கமராக்களை பரிசோதனை செய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
“மிதிகம லசா” படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைதுசெய்வது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுவதற்கு நான்கு விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.