வவுனியா நகரப் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.
வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில், தலைமைப் பொலிஸ் நிலைய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி றிஸ்னி தலைமையில் பொலிஸார் வவுனியா நகரப் பகுதியில் விசேட நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டனர்.
இதன்போது, 15 கிராம் ஐஸ் போதைப் பொருளை உடமையில வைத்திருந்த இளைஞர் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் மன்னார் பகுதியைச் சோந்த 23 வயதுடைய இளைஞராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.