கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம்(4.3.2026) கொழும்பின் மையப்பகுதியில் வளித் தரச் சுட்டெண் 144 ஆகப் பதிவாகியுள்ளது.
எனினும் பாதுகாப்பான அளவு 50 க்கும் குறைவாக இருக்க வேண்டும்.100 க்கும் அதிகமான பதிவுகள் ஆரோக்கியமற்ற சூழலைக் குறிக்கின்றன.
இது தொடர்பாக சிறுவர் நல மருத்துவ நிபுணர் மஹேஷாக விஜயவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “மாசுபட்ட காற்றைச் சுவாசிப்பது சிறுவர்களின் நுரையீரல் மற்றும் மூளை வளர்ச்சியைப் பாதிக்கும்.
இது ஆஸ்துமா, சுவாச நோய்கள் மற்றும் சிறுவர் மரண வீதத்தை அதிகரிக்க வழிவகுக்கும்” என எச்சரித்தார்.