தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் பாடல்களை பாடிய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தியினை ஆதரித்து சமூக ஊடகங்களில் வெளியான பாடல்களில் புலிகளின் தலைவருக்கு வல்வெட்டித்துறையில் சிலை நிறுவுவோம் எனவும் பாடலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தேர்தல் பிரச்சாரத்திற்கு அப்பாடலை பயன்படுத்தலாம் எனில், கிளிநொச்சி இளைஞனின் பாடலுக்காக ஏன் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர்பில் கேட்டபோது, அப்பாடலுக்கும் தமது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.