வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக இலங்கை இணைந்துள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ ஆவணம் கடந்த 16-ஆம் திகதி சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த ஆவணத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட் எஃப். ஹூங்போவிடம் கையளித்தார்.

இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம், தொழிலாளர் சமூகத்தின் கௌரவம், சமத்துவம் மற்றும் மதிப்பினைப் பாதுகாப்பதில் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழலை உருவாக்குவதற்காக இலங்கை எடுத்துள்ள இந்தச் சிறப்பான நடவடிக்கை மிகவும் முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அங்கீகரிக்கப்பட்ட உடன்படிக்கைகளுக்கு இணங்க சட்ட மற்றும் நிறுவனக் கட்டமைப்புகளைத் தயாரிப்பதற்கு இலங்கை அரசாங்கம் உள்ளிட்ட தரப்பினருக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய ஜெனிவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி சுமித் திஸாநாயக்க, இந்த உடன்படிக்கையை அங்கீகரிப்பதன் மூலம் ஒவ்வொரு நபரும் எந்தவித துன்புறுத்தலும் இன்றி வேலைச் சூழலில் வாழ்வதற்கான உரிமையை மதிக்கவும், மேம்படுத்தவும் மற்றும் யதார்த்தமாக்கவும் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ள அர்ப்பணிப்பு வெளிப்படுவதாகச் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உள்நாட்டு சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தவும், தற்போதுள்ள தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவும் இலங்கை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரிப்பதற்கான ஆவணம், கடந்த ஜனவரி மாதம் 08-ஆம் திகதி கொழும்பில் நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வின் போது, பிரதி தொழிலாளர் அமைச்சர் மஹிந்த ஜயசிங்கவினால் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி ஜொனி சிம்ப்சனிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் தெளிவான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட அடிப்படையை வழங்கும் முதலாவது சர்வதேச சட்ட ஆவணம் இந்த 190-வது உடன்படிக்கையாகும்.

குறிப்பாக, பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிப்பதும் இந்த உடன்படிக்கையில் உள்ளடங்கியுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும்.

இதன் மூலம், இந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட உலகின் 55-வது நாடாகவும், தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் இலங்கை இடம்பிடித்துள்ளது.

Dead

உழவியந்திரம் கவிழ்ந்து இளம் குடும்பஸ்தர் பலி!

April 19, 2026

வவுனியா வடக்கு, மதியாமடு பகுதியில் நேற்று இடம்பெற்ற கோர விபத்தில் உழவியந்திரம் கவிழ்ந்ததில் 29 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவர்

Ann

உணர்வெழுச்சியுடன் அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வு!

April 19, 2026

இந்திய இராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராக 31 நாட்கள் சாகும் வரை உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த தியாகத்தாய் அன்னை பூபதியின் 38ஆம்

mar'

மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள கனேடிய பிரதமர் மார்க் கார்னி!

April 19, 2026

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் அவர் ஆற்றிய உலகப் புகழ்பெற்ற உரையாக இருக்கலாம், அல்லது “ஜார்ஜ்

t

ஒற்றுமைக்கான முயற்சியை தமிழ்க் காங்கிரஸ் தகர்த்தது! – தமிழரசுக் கட்சி கடும் சீற்றம்

April 19, 2026

தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையே தீவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட ஒற்றுமை முயற்சியை அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி தகர்த்திருக்கின்றது

tru

ஈரான் எங்களை மிரட்ட அனுமதிக்க மாட்டோம் – டொனால்ட் ட்ரம்ப்

April 19, 2026

நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திடும் நிகழ்வின் போது, ஈரானுடனான தற்போதைய பதற்றம் குறித்து அதிபர் ட்ரம்ப் சுருக்கமாகக் கருத்துத் தெரிவித்தார்.

san

வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் இல்லாத வேலைச் சூழல்; உடன்படிக்கையை அங்கீகரித்தது இலங்கை!

April 19, 2026

வேலை உலகில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை ஒழிப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 190-வது உடன்படிக்கையை அங்கீகரித்த உலகின் 55-வது நாடாக

dd

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கு பிரார்த்தனை

April 19, 2026

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அன்று உயிரிழந்தவர்களை விசுவாசத்தின் சாட்சியாளர்களாக வத்திக்கான்

WhatsApp Image 2026-04-19 at 07.36.16

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம்

April 19, 2026

அல்வாய் சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் கோயில் மஹோற்சவம் எதிர்வரும் 22ஆம் திகதி புதன்கிழமை காலை 10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. சித்ரா

may

மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு

April 19, 2026

இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp)

LAsan

பொதுமக்களின் பலத்த அழுத்தம் காரணமாகவே இந்தப் பதவி விலகல்- லசந்த அழகியவண்ண

April 19, 2026

வலுசக்தி அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் ஆகியோர் பதவிகளில் இருந்து விலகியமையானது எதிர்க்கட்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்று ஸ்ரீலங்கா

namal

ஜனாதிபதி வேட்பாளராக நாமல்; இரகசிய தகவல் வெளியானது!

April 19, 2026

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த பல கட்சிகளின் கூட்டணியில் நாமல் ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என மொட்டுக்

iran

ஈரானிய துறைமுகங்கள் அமெரிக்காவால் முற்றுகை!

April 18, 2026

ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களுக்கு எதிரான தனது அறிவிக்கப்பட்ட கடல் முற்றுகையை அமெரிக்கா