ஜனாதிபதி செயலகம் மற்றும் கிளின் சிறிலங்கா செயலகம் என்பவற்றின் அனுசரணையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பாதுகாப்பான சேவையினை வழங்குவதனை பிரதான நோக்காக கொண்டு இரு நாள் விழிப்புணர்வுக் கருத்தமர்வொன்றை நடத்தியது.
இந்த செயலமர்வு வடக்கு மாகாண சுற்றுலாத் துறை சார் முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகளுக்கான நெறிமுறைகள், மனோபாவம் என்பவற்றினை விருத்தி செய்வதற்கான சனிக்கிழமை (13) ஞாயிற்றுக்கிழமை (14) ஆகிய திகதிகளில் வலி வடக்கு பிரதேசசபையில் கொல்லங்கலட்டியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது நடைபெற்றது.
இப்பயிற்சி நெறி மூலம் 40 சாரதிகள் பயிற்றுவிக்கப்பட்டதுடன் பயிற்சி நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.