வடக்கும் கிழக்கும் மலையகத் தமிழ் உறவுகளுக்கு துணை நிற்கும் – சுரேஷ் பிரேமச்சந்திரன்

வடக்கு – கிழக்கு என்றும் மலையகத் தமிழர்களுக்குத் துணை நிற்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையின் முழு விவரம் வருமாறு, அண்மையில் முழு நாட்டையும் புறட்டிப் போட்ட டித்வா சூறாவளி, மலையகத்தை வழக்கம் போலவே சூறையாடிச் சென்றுள்ளது.

நாளைய விடியல் குறித்தும் எதிர்காலம் குறித்தும் பல்வேறு கனவுகளுடனும் இருந்த ஏராளமானோரை நொடிப்பொழுதில் காவுகொண்டு மண்ணுக்கடியில் புதைத்தது. உறவுகள் இருக்கின்றார்களா? அவர்கள் நலமுடன் இருப்பார்களா என்று ஏக்கப் பெருமூச்சு விடும் நிலைக்கும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் நிலைக்கும் இயற்கை அந்த மக்களை வஞ்சித்துள்ளது.

இலங்கையில் தமிழனாக இருப்பவர்கள் அனைவரும் துன்பப்படத்தான் வேண்டுமோ என்று நினைக்கும் அளவுக்கு இம்முறை மலையகத் தமிழர்களையும் வடக்கு – கிழக்கு தமிழர்களையும் டித்வா புரட்டிப் போட்டுள்ளது.

இந்த டித்வா சூறாவளியால் மலையகத்தில் எழுநூறுக்கும் மேலான மக்கள் நிலச்சரிவுகளில் அகப்பட்டு மண்ணுக்குள் புதையுண்டு இறந்துள்ளனர். முன்னரும்கூட இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றாலும் இப்பொழுது இது மிகவும் பாரதூரமான அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைக்குப் பாரிய அளவிலான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் பெருந்தோட்ட உறவுகள் 250 வருடங்களாக சொந்த நிலமின்றி, சொந்த வீடின்றி, அல்லலுறும் நிலையையே இதுவரை நாங்கள் பார்த்து வருகின்றோம்.

இலங்கையில் அவ்வப்போது ஏற்படும் இனப்படுகொலைகளின்பொழுது மலையகத் தமிழர்களும் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு புகலிடம் தேடி வடக்கு – கிழக்கில் குடியேறியுள்ளனர்.

1977, 1981 மற்றும் 1983 காலப்பகுதிகளில் இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்கள் வடக்கு – கிழக்கில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் குடியேறியுள்ளனர்.

அவர்கள் இன்று தங்களுக்கான காணிகளுடனும் வீடுகளுடனும் இருப்பதுடன் கல்வியிலும் மேம்பட்டு தம்மைத் தாமே கவனித்துக்கொள்ளக்கூடிய வகையில் வளர்ச்சியடைந்துள்ளனர்.

இலங்கை சுதந்திரமடைந்த உடன் மலையகத் தமிழர்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் நாடற்றவர்களாக்கப்பட்டனர். சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தினூடாக, ஒருபகுதி மக்கள் இந்தியா சென்றுவிட மறுபகுதியினர் இலங்கையில் தங்கினர்.

அவ்வாறு இலங்கையில் இருந்தவர்களுக்குக்கூட முழுமையான வாக்குரிமை மற்றும் குடியுரிமையைக் கொடுக்க இலங்கை அரசுகள் மறுதலித்தே வந்தன.

1985ஆம் ஆண்டு, இலங்கை அரசுக்கும் தமிழர் தரப்புக்கும் இடையில் நடைபெற்ற திம்பு பேச்சின்போது, தமிழர் தரப்பினர் நான்கு முக்கியமான கோரிக்கையை முன்வைத்தனர். அதில் ஒன்று இலங்கையில் இருக்கக்கூடிய அனைத்து மலையகத் தமிழ் மக்களுக்கும் வாக்குரிமை, குடியுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும்.

இதன் பின்னர், அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன, அமைச்சர் சௌமியமூர்த்தி தொண்டமானுடன் பேசி, அம்மக்களுக்கான வாக்குரிமை, குடியுரிமை என்பன வழங்கப்பட்டன. ஆனால், இன்றும் அவர்களில் பெரும்பாலானோர் காணி உரிமை அற்றவர்களாகவும் எவ்வித முன்னேற்றமும் அற்றவர்களாகவும் தேயிலைத் தோட்டத்தின் லயன்களில் வசிப்பவர்களாகவுமே இருக்கின்றனர்.

இந்தப் பின்னணியில் இயற்கை அனர்த்தங்களால் அந்த மக்கள் தொடர்ச்சியாக தமது உயிரை அர்ப்பணித்து வருவதானது, ஏற்புடைய விடயமல்ல.

ஆகவே, எமது பெருந்தோட்ட உறவுகளுக்கு இலங்கை அரசாங்கம், மலையகத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான இடங்களை வழங்கி, இயற்கை அனர்த்தத்திலிருந்து அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் வடக்கு – கிழக்கில் அந்த மக்கள் குடியேறி வாழ விரும்புகின்ற சூழ்நிலையில், அதற்கான உதவிகளையும் ஒத்தாசைகளையும் வழங்கத் தமிழ் மக்கள் தயாராகவே இருக்கின்றனர்.

முன்னர் ஏற்பட்ட இனக்கலவரங்களின்பொழுதும் வடக்கு – கிழக்குக்குத் துறத்தப்பட்ட எமது உறவுகளை வரவேற்று உபசரித்து அவர்கள் அச்சமின்றி வாழக்கூடிய அடிப்படையில் காணிகளை வழங்கி, தேவையான உதவிகள் செய்யப்பட்டு, அவர்கள் மனிதர்களாக வாழக்கூடிய சூழ்நிலையை வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் ஏற்படுத்திக்கொடுத்தார்கள்.

அரசு எவ்வித உதவியையும் செய்யாமலேயே தமிழ்த் தொண்டு நிறுவனங்களும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

மலையக உறவுகள் வடக்கு – கிழக்கில் குடியேற விரும்பும் பட்சத்தில் புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற மக்களின் காணிகளை மட்டுமன்றி, அவர்களின் தேவையின் அடிப்படையில் காணிகளை வழங்கி, அவர்கள் நிரந்தரமாகவும் பாதுகாப்பாகவும் வாழ்வதற்கான நடவடிக்கைகளை தமிழ் தரப்புகள் மேற்கொள்ளத் தயாராகவே இருக்கின்றனர்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் மலையக மக்களின் பங்களிப்பும் மகத்துவமானது. மலையக மக்கள் வடக்கு – கிழக்கில் குடியேறுவது புதியதுமல்ல. அவர்களுக்கு இந்தப் பிரதேசம் அந்நியமானதுமல்ல.

இந்த நாட்டில் மாறிமாறி வந்த அரசுகள் மேற்கொண்ட இனப்படுகொலைகளின் காரணமாகவே மலையக மக்கள் புலம்பெயர்ந்து வடக்கு – கிழக்குக்கு வந்தார்கள். போர் காரணமாக வடக்கு – கிழக்கிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றார்கள்.

, புலம்பெயர்தல் என்பது வடக்கு – கிழக்கிலும் மலையகத்திலும் நடைபெற்றுக்கொண்டே வந்துள்ளது. இப்பொழுது இயற்கை அனர்த்தம் அவர்களைப் புலம்பெயரச் செய்துள்ளது. அவர்களுக்கான வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் உருவாக்க அரசு தவறினால் அவர்களை அரவணைத்துப் பாதுகாப்பதில் வடக்கு – கிழக்கு முன்னிற்கும்.” – என்றுள்ளது.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்