லெபனானில் வசித்து வரும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் ஒருவரை அடையாளம் காண்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
அமைச்சின் தகவல்படி, அந்தப் பெண் “ரஹ்மா” (Rahma) என்று அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரது உண்மையான அடையாளம், குடும்ப விபரங்கள் மற்றும் அவர் இலங்கையில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற விபரங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே, அந்தப் பெண்ணை அடையாளம் காண அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவருக்குத் தெரிந்தவர்களைத் தொடர்புகொள்ள உதவக்கூடிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், முன்வந்து விபரங்களை வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களை பத்தரமுல்ல, சுஹுருபாய (Suhurupaya) கட்டடத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவிடம் (Consular Affairs Division) சமர்ப்பிக்கலாம். அல்லது, +94 11 227 5525 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாகவோ அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாகவோ அமைச்சைப் தொடர்புகொள்ளலாம்.
பெறப்படும் அனைத்துத் தகவல்களும் முற்றிலும் ரகசியமாகப் பேணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.