லக்சபான தேயிலை தொழிற்சாலையின் மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம்

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது.

லக்சபான தேயிலை தொழிற்சாலை தீ விபத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமானுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்த தீ விபத்து தொடர்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து வெளியிட்டு, குறித்த தேயிலை தொழிற்சாலையை மிக விரைவாக மீள்புனரமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

லக்சபான, வாழமலை, எமில்டன், முள்ளுகாமம் மே.பி, முள்ளுகாமம் கீ.பி ஆகிய ஐந்து தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 772 தொழிலாளர்கள் தினசரி பறிக்கும் தேயிலை கொழுந்துகள், 75 தொழிற்சாலை தொழிலாளர்களால் லக்சபான தேயிலை தொழிற்சாலையிலேயே தேயிலைத் தூளாக உற்பத்தி செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தீ விபத்தினால் தற்காலிகமாக செயலிழந்திருந்த லக்சபான தேயிலை தொழிற்சாலை, தற்போது புதிய மாற்றங்களுடன் மீள்புனரமைக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்கள் லக்சபான தேயிலை தொழிற்சாலைக்கு நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு, தீ விபத்து தொடர்பாகவும், தற்போது இடம்பெற்று வரும் மீள்புனரமைப்பு பணிகள் குறித்தும் லக்சபான தோட்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத் அவர்களுடன் கலந்துரையாடி விபரங்களை கேட்டறிந்தார்.

இதன் போது, தீ விபத்து தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தமைக்காக ஜீவன் தொண்டமான் அவர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்ட பிரதி பொது முகாமையாளர் துசான் ஹேரத், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் தேயிலை தொழிற்சாலையை முழுமையாக மீள்புனரமைத்து, வழமைபோல் தேயிலைத் தூள் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான், குறித்த தேயிலை தொழிற்சாலை தொடர்பாக மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்துடன் தாம் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளதாகவும், தொழிற்சாலையை மீளத் திறப்பதற்கான தேவையான உதவிகள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும், முழுமையான ஆதரவை வழங்க தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித

Ninda

புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோரின் உறுப்புரிமை இரத்து!

March 5, 2026

நிந்தவூர் பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவுக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறும் உறுப்பினர்களின் உறுப்புரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

anu

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்கள் குறித்துக் கண்டறியுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்குப் பணிப்பு

March 5, 2026

மத்திய கிழக்கின் யுத்த சூழல் நிலவும் பகுதிகளில் உள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும்

us

உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்கள் வெளியீடு

March 5, 2026

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் மோதல்களில் உயிரிழந்த முதல் அமெரிக்கப் படையினரின் விபரங்களை அமெரிக்க இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

new

2026 ஐசிசி ஆண்கள் டி20; நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு தகுதி

March 5, 2026

2026 ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கிண்ணத் தொடரின் விறுவிறுப்பான முதலாவது அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்க அணியை 9 விக்கெட்டுகளால்

Sarath Savendra

அனுர அரசினால் சரத் பொன்சேகா மற்றும் சவேந்திரா சில்வா வகித்த பதவி ரத்து?

March 5, 2026

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் ரத்து

ganja

ஊர்காவற்துறையில் கஞ்சா கடத்த முற்பட்ட இளைஞர் கைது!  

March 4, 2026

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுருவில் பகுதியில் 9 கிலோ கிராம் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது

boa

கடற்றொழிலாளர்களுக்கு தடையின்றி எரிபொருள் விநியோகம்

March 4, 2026

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கடற்றொழிலாளர்களுக்குத் தேவையான எரிபொருளை எந்தவிதத் தடையுமின்றி விநியோகிப்பதற்கு முறையான பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகக்

curr

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக செயற்பட்டு வருகிறது

March 4, 2026

வெளிநாட்டு நாணயமாற்று நிர்வாகமானது இலங்கையின் பொருளாதார நிலையை அளவிடும் கருவியாக வரலாற்று அடிப்படையில் செயற்பட்டு வருகிறது என திருகோணமலை மாவட்ட

b

பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

March 4, 2026

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர்

arrest

போதைப்பொருளுடன் இராணுவச் சிப்பாய் கைது

March 4, 2026

திருகோணமலையில் வான்எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று(04.03.2026) கைது