ஒட்டாவாவில் உள்ள றோயல் ஒட்டாவா மனநல மருத்துவ மையத்தில் (Royal Ottawa Mental Health Centre) அறிவிக்கப்பட்டுள்ள பணிநீக்கங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தினர்.
மருத்துவமனையின் நீண்டகால பராமரிப்புப் பிரிவான ‘றோயல் ஒட்டாவா பிளேஸ்’ (Royal Ottawa Place) பகுதியில் 15 பணியிடங்கள் உட்பட மொத்தம் 20 பணியிடங்களை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பணிநீக்கம் செய்யப்படுபவர்களில் பெரும்பாலானோர் மருத்துவத் தாதிகள் மற்றும் தனிநபர் பராமரிப்பு உதவியாளர்கள் (PSWs) ஆவர்.
இந்த ‘றோயல் ஒட்டாவா பிளேஸ்’ பிரிவில் சுமார் 64 நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனை எதிர்த்து ‘குயூப்’ (CUPE 942) தொழிற்சங்கம் கார்லிங் அவென்யூவில் உள்ள மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே முழக்கங்களை எழுப்பியது.
தொழிற்சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மருத்துவமனை நிர்வாகம், இது ஒரு சாதாரண ‘நிர்வாக நடவடிக்கை’ என்று கூறியுள்ளது.