ரி – 56 ரக துப்பாக்கியுடன் வயோதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி நபர் கொழும்பு – கிராண்ட்பாஸ் ஜோசப் வீதி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிராண்ட்பாஸ் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து ரி – 56 ரக துப்பாக்கி மற்றும் 27 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கொழும்பு 14ஐச் சேர்ந்த 67 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.