ரஜினி விரைவில் சினிமாவில் இருந்து தன் ஓய்வை அறிவிக்கப்போகின்றார் என்ற தகவல் தீயாய் பரவி வருகின்றது. இது ரஜினி ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்த விரைவில் இந்த வதந்திக்கு தலைவர் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதே ரஜினி ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
ரஜினிகாந்த் சினிமாவில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தற்போது மீண்டும் பரபரப்பாக தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக அவ்வப்போது ரஜினி நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என செய்திகள் வந்த வண்ணம் தான் உள்ளன. பாபா, எந்திரன், ராணா, கூலி என ஒவ்வொரு படங்களின் போதும் ரஜினி ஓய்வு பெற இருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டு வருகின்றன. அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பிறகு கூட ரஜினி இனி படங்களில் நடிக்கமாட்டார் என்றெல்லாம் சொல்லப்பட்டது.