யாழ்ப்பாண பிரதேச செயலகத்திற்கு புதிய பிரதேச செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட சிவகாமி உமாகாந்தன் இன்றையதினம் (27.10.2025) அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் தமக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
இவர் 2019.4.12 -2025.10.24 வரை கடந்த ஆறு வருட காலமாக கரவெட்டியில் உதவிப் பிரதேச செயலாளராக கடமையாற்றி இன்றையதினம் (27.10.2025) யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.