மேன்முறையீட்டு முடிவு வரும் வரையில், தங்களை பழைய பணியிடங்களிலேயே (பழைய பாடசாலைகளிலேயே) தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வட மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு அலுவலகத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (26 மார்ச் 2026) இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தை முன்னிட்டு அந்தப் பகுதியில் பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தமது இடமாற்றம் தொடர்பான மேன்முறையீடுகள் பரிசீலனையில் இருக்கும் நிலையில், அதுவரை தற்போதைய நிலையங்களிலேயே கடமையாற்ற அனுமதிக்குமாறு ஆசிரியர்கள் இதன்போது வலியுறுத்தினர்.