மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மூத்த உதவியாளர் முகமது மொக்பர்,

ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை. தேவைப்படும் வரை மத்திய கிழக்கில் போரைத் தொடருவோம் என்று அரசு தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர இராணுவம் அமெரிக்காவுக்கு எதிராக 17 ஆவது அலை தாக்குதல்களைத் தொடங்கியதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டுள்ளது.

புதன்கிழமையன்று ‘ஒபரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ தாக்குதல்களை அறிவித்த ஈரான் இஸ்லாமிய புரட்சிகர இராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை, இஸ்ரேல் – அமெரிக்க கூட்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, தங்கள் இராணுவம் அமெரிக்க இராணுவ தளங்கள் மீது 230 இற்கும் மேற்பட்ட தாக்குதல் ட்ரோன்களை ஏவியதாகக் கூறியது.

ஈரானிய பதிலடித் தாக்குதல்களில் குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

மேலும், ஈரானின் தாக்குதலில் பஹ்ரைனில் உள்ள ஒரு பெரிய அமெரிக்க விமானத் தளம் முடக்கியுள்ளது. ஈரான் ராணுவத்தின் தகவல்களின்படி, போரின் முதல் இரண்டு நாள்களில் பல்வேறு அமெரிக்க தளங்களில் உள்ள அமெரிக்க படைகளில் 680 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று கூறியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் 51 ஆவது பிரிவின்படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் ஆக்கிரமிப்புச் செயல்களுக்கு எதிராக தன்னைத் தற்காத்துக் கொள்ள ஈரானுக்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

டெஹ்ரானின் இமாம் கோமெய்னி பிரார்த்தனை மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனிக்கு ஈரானியர்கள் பிரியாவிடை அளிப்பார்கள் என்றும் ஈரானின் அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிகழ்வு 3 நாட்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 84 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்