மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொட்டாவை – எம்புல்தெனிய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்தனர்.
எம்புல்தெனிய நோக்கிப் பயணித்த கார், கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கோட்டை – தலவதுகொட பகுதியை சேர்ந்த 60 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.