முழு நாடும் போதைப்பொருளை ஒழிப்பதற்கு ஒன்றுபட வேண்டும் – ஜனாதிபதி

நாட்டிலிருந்து போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதில் இனிமேலும் விவாதித்துக் கொண்டிருப்பதற்கு இடமில்லை. போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான துரித வேலைத்திட்டத்திற்காக முழு நாடும் ஒன்றுபட வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

‘போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ” முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ குறித்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கு விளக்கமளிப்பதற்காக நேற்று வியாழக்கிழமை (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இளைஞர் சமூகத்தைப் போன்றே பாடசாலை மாணவர்களின் உயிருக்கும் ஆபத்தை விளைவித்து வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை மையமாகக் கொண்டு அநேகமான குற்றங்கள் நடப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மட்டத்தில் அரசியல் தலைமைத்துவம், செயற்திறனாக முடிவெடுக்கும் பொறிமுறை மட்டுமன்றி பரந்த பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய தேசிய மட்டத்திலான வேலைத்திட்டத்தின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அந்த தேசிய நோக்கத்தை அடைவதற்காக , ”முழு நாடுமே ஒன்றாக – தேசிய செயற்பாடு’ முன்னெடுக்கப்படுவதோடு பரந்தளவிலான பிரச்சார செயல்முறையின் ஊடாக போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்து சமூகத்தின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு பாரிய திட்டமொன்றாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த பிரச்சார திட்டத்தை செயல்படுத்துவதில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்களால் மேற்கொள்ளக் கூடிய பங்களிப்பு குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.

உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றக் கும்பல்களின் நிதி பலம் என்பன பொருளாதாரம், சமூகக் கட்டமைப்பு, அரச பொறிமுறை மற்றும் சட்டத்தின் ஆட்சியைக் கூட வீழ்ச்சியடையச் செய்து நாட்டையும் சமூகத்தையும் அழித்து வருவதாகத் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் இந்த அச்சுறுத்தலுக்கு இனிமேலும் இடமளிப்பதில்லையென முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக அனைவரின் பங்களிப்பையும் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மீண்டும் இவ்வாறான நிலைமை ஏற்படாதவாறு எதிர்கால சந்ததியினருக்காக இந்த தேசிய பேரழிவைத் தோற்கடிப்பதற்கு அனைவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள மறுக்க முடியாத பொறுப்பை ஜனாதிபதி மேலும் வலியுறுத்தினார்.

முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெறும்.

சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, ஆகியோருடன் அரச மற்றும் தனியார் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பொழுதுபோக்கு துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்

ajar

அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

March 6, 2026

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

kat

இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

March 6, 2026

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக

har

சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

March 6, 2026

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள

Dengue

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

March 6, 2026

மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக

boa

நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

March 6, 2026

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும்

Pee

பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

March 6, 2026

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும்

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா