முதலீட்டாளர்கள், பொருளாதார வளர்ச்சி வேகம் குறித்து வரவு – செலவு திட்டத்தில் இன்னும் அவதானம் செலுத்தியிருக்கலாம் – பொருளாதார நிபுணர் தனநாத்

வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும். இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் அடுத்த வருடத்துக்கான வரவு – செலவு திட்டத்தில் பாரிய மாற்றங்கள் எவையும் இல்லை என பொருளாதார நிபுணர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று சனிக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த வரவு – செலவு திட்டத்தில் மூன்று கோணங்களில் அவதானம் செலுத்தியிருக்கலாம்.

முதலாவது வரவு மற்றும் செலவை முகாமைத்துவம் செய்தல், இரண்டாவது அதற்கான நடவடிக்கைகளை சர்வதேச நாணய நிதியத்தின் பொறிமுறைகளுடன் சமநிலைப்படுத்தல், மூன்றாவது வர்த்தகர்கள், மக்கள் மற்றும் நாட்டுக்கான நன்மைகள் என்பவை குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தியிருக்க வேண்டும்.

இந்த மூன்று விடயங்களும் ஓரளவு உள்வாங்கப்பட்டுள்ளன. எவ்வாறிருப்பினும் இவ்வாண்டுடன் ஒப்பிடுகையில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவாகவே காணப்படுகிறது. மேலும் செயற்பாட்டு ரீதியிலான சிறிய விடயங்கள் பல உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.

பெருந்தோட்டத் தொழிற்துறை தொடர்பிலும் இன்னும் ஆழமாக அவதானம் செலுத்தியிருக்கலாம். டிஜிட்டல் மயப்படுத்தல் தொடர்பில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்துக்கு உரித்தான வர்த்தக மறுசீரமைப்புக்கள் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

கூறப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள நேரிடும். வட் வரி விதிப்பிற்கான வரியறை குறைக்கப்பட்டுள்ளது. மாறாக புதிதாக எந்தவொரு வரியும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

வரி ஸ்திரத்தன்மை பேணப்படுவது சிறந்த தீர்மானமாகும். பாரியளவு மாற்றங்கள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை. எனினும் இவ்வாண்டை விட அடுத்த ஆண்டு வரவு மற்றும் செலவுக்கிடையிலான இடைவெளி அதிகரித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத் திட்டம் நிறைவடைந்தாலும், நிதியியல் ஒழுக்கத்தை பேண வேண்டும். வாகன இறக்குமதியை சமூக பாதுகாப்பு வரியின் கீழ் உள்ளடக்குவதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உற்பத்தியின் போதும் இறக்குமதியின் போதும் வரி அறவிடப்படும் என்றும், விற்பனையின் பின்னர் வரி அறவிடப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு வரி அறவிடப்பட்டால் வாகனங்களின் விலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம்.

சமூக பாதுகாப்பு தொடர்பில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை. அஸ்வெசும உள்ளிட்ட ஏனைய சில திட்டங்கள் தொடர்பில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீட்டின் பின்னர் சமூக நலன்களுக்கு பாரியளவு நிதியை ஒதுக்க முடியாது.

இதன் காரமணான தற்போது வறுமைக்கோட்டிலுள்ள 25 சதவீதமானோரும், அதனை அண்மித்த நிலைமையிலுள்ள 10 சதவீதமானோரும் சற்று சவாலாக குழுவாகவே காணப்படுவர்.

ஒட்டுமொத்தமாக இந்த வரவு – செலவு திட்டத்தில் சிறந்த விடயங்களும் உள்ளன. சற்று சிந்தித்திருக்கலாம் என்று தோன்றும் விடயங்களும் உள்ளன. முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சி வேகம் தொடர்பில் சற்று ஆழமாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்திருக்கலாம் என்பது எமது நிலைப்பாடாகும்.

சிறிது சிறிதான யோசனைகள் பலவற்றை முன்வைப்பதை விட ஒரே சந்தர்ப்பத்தில் பொருளாதார நிலைமையை மாற்றக் கூடிய பிரதான வேலைத்திட்டத்தில் அவதானம் செலுத்தியிருக்கலாம் என்றார்.

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த