மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக செயற்படுங்கள் – யாழ் மக்களிடம் கோரிக்கை

யாழில் அதிகரித்து வரும் மீற்றர் வட்டி மாபியாவுக்கு எதிராக மக்கள் தகவல்களை எனக்குத் தரலாம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, மக்களிடம் அதிகமான காசோலைகளை பெற்றுக் கொண்டு அதை அடிப்படையாகக் கொண்டு மிரட்டி அல்லது சொத்துக்களை இழக்கச் செய்தவர்களும் என்னுடன் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல் கட்டமாக 08 பேருக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார், அவர்களில் ஐவருக்கு எதிராக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில், மூவருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றிலும் வழக்குகள் தொடரப்படவுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதச் செயற்பாடுகளின் தீவிரத்தைக் குறைக்க அவசர நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆலோசனைக் குழுவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் விற்பனையிலிருந்து பெறப்படும் பணம், சமூக விரோதச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுவதுடன், மீட்டர் வட்டி வணிகம், ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து, குழுச் சண்டைகள் போன்ற குற்றச் செயல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ey

இலங்கையில் பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட்

November 18, 2025

உலகின் முதலாவது பார்வையற்ற மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய – பாகிஸ்தான் வீராங்கனைகள் கைகுலுக்கி

aa

ஏஎவ்சி ஆசிய கிண்ண 2ஆம் கட்ட கால்பந்தாட்டப் போட்டி

November 18, 2025

தாய்லாந்துக்கு எதிராக இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெறவுள்ள ஏஎவ்சி ஆசிய கிண்ண 3ஆம் சுற்று தகுதிகாண் 2ஆம் கட்ட (2nd

tam

நாளை இலங்கைத் தமிழரசுக்கட்சி ஜனாதிபதியை சந்திக்கிறது!

November 18, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான

p_Anu

சட்டவாட்சி பௌத்த அடிப்படைவாதத்திடம் மண்டியிட்டுள்ளதா?

November 18, 2025

தம்மிடம் இனவாதம், மதவாதம் இல்லை என்று மார்பு தட்டிய தேசிய மக்கள் சத்தியினர்,ச ட்டவாட்சியை விட்டுச் சறுக்கி விழுந்து, பௌத்த

kath

மனநல நோயாளியின் கத்தி குத்தில்: 7 பேர் படுகாயம்

November 18, 2025

கண்டி மெததும்பர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) அன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மனநல

Judment

கொடிகாமம் குளத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்; விசாரணைகளுக்கு உத்தரவு

November 18, 2025

யாழ்ப்பாணம் – கொடிகாமம் குளத்திலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீட்கப்பட்ட இளைஞனின் வழக்கு தொடர்பான விசாரணைகளுக்கு நீதிமன்றம் மீண்டும்

ko

மண்சரிவு அபாயம்

November 18, 2025

பெரகல-வெல்லவாய சாலையில் ஹல்துமுல்லவில் உள்ள கொஸ்லந்த கல்வெட்டுக்கு மேலே உள்ள மலையின் ஒரு பகுதி நேற்று திங்கட்கிழமை (17) காலை

ma

சிறைச்சாலையில் குழப்பங்கள் வெடிக்குமென சபையில் எச்சரிக்கை?

November 18, 2025

அதிகபடியான நெரிசலால் மெகசின் சிறைச்சாலை “வெடிக்கத் தயாராக” இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். நீதி மற்றும்

ba

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

November 18, 2025

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, சட்டவிரோதமாகப் பெறப்பட்ட 50 மில்லியன் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்படும்

aru

சுமந்திரன் சீற்றம்; அருண் ஹேமச்சந்திரா உடனடியாக பதவி விலக வேண்டும்

November 18, 2025

அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தே. ம. ச. அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக்

pu)Nama

புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் – நாமல்

November 18, 2025

திருகோணமலை புத்தர் சிலை விவகாரப் பிரச்சினையை இனவாதப் பிரச்சினையாக மாற்றுவதற்கு இடமளிக்காதீர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய

Arrest_1

பெரும்பான்மை இன யாழ் பல்கலைக்கழக மாணவன் போதைப் பொருளுடன் கைது

November 17, 2025

யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்ட