“மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே” – தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கம்

ஒப்பந்த காலம் நிறைவடைந்து வெளியேறாமல், தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் கட்டிடத்தில் இருந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் தனியார் நிறுவனத்தை உடனடியாக வெளியேறுமாறு கோரி தம்பாட்டி கிராமிய கடற்றொழில் அபிவிருத்தி சங்கத்தினர், குறித்த கட்டிடத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை (30) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, “தனியார் நிறுவனமே உடனடியாக வெளியேறு”, “எங்கள் வீட்டில் உங்கள் ஆட்சியா?”, “ஒப்பந்தகாலம் நிறைவடைந்தும் வெளியேறாமல் இருப்பது அராஜகமான செயற்பாடு”, “மீனவர்களின் வயிற்றில் அடிக்காதே”, “எமது கட்டிடம் எமக்கு வேண்டும்”, “மீனவர்களுக்கு அநீதி இழைக்காதே” போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து, போராட்டத்தில் ஈடுபட்ட தம்பாட்டி கடற்றொழில் கிராமிய அபிவிருத்தி சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,

எமது சங்க கட்டிடமானது கடந்த நிர்வாகத்தால் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 5 வருட கால ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்டது. 2018ஆம் ஆண்டு வழங்கப்பட்ட நிலையில் 2023ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளது. ஒப்பந்த காலம் நிறைவடைந்து 2 வருடங்கள் கடந்தும் அவர்கள் வெளியேறவில்லை.

வேறொரு நிறுவனமானது எம்மிடம் வந்து 80பேருக்கு வேலைவாய்ப்பும், 10 இலட்சம் ரூபாய் முற்பணமும், மாதாந்தம் 50ஆயிரம் ரூபாய் வாடகையும் தருவதாகவும் கூறினார்கள். நாங்கள் அவர்களுடன் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒப்பந்தமும் செய்துவிட்டோம். ஆனால் ஏற்கனவே எமது கட்டடத்தை பயன்படுத்தும் நிறுவனமானது வெளியேறாத காரணத்தால் புதிதாக ஒப்பந்தம் செய்த நிறுவனம் தமது பணிகளை முன்னெடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

புதிய நிறுவனத்தின் வருகையால் எமது பகுதியில் உள்ள பல பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதாரமும் கிடைக்கவுள்ளது. ஆனால் அதற்கு எல்லாம் வழி விடாது, ஏதோ ஒரு பின்னணியை வைத்து அந்த நிறுவனம் வெளியேறாமல் இருக்கிறது.

எமது அனுமதியின்றி எமது கட்டடத்திலும், கட்டடம் அமைந்துள்ள வளாகத்திலும் பல்வேறுவிதமான வேலைகளை செய்கிறனர். உள்ளே என்ன நடக்கிறது என்று கூட எமக்கு தெரியவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசியிருந்தோம் இருப்பினும் அவர்களும் எமக்கு தீர்வு வழங்கவில்லை.

குறித்த நிறுவனமானது இதற்கு பின்னரும் வெளியேறாவிட்டால் ஏற்படக்கூடிய விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. ஏனெனில் அவர்கள் சட்டவிரோதமாக இருக்கிறார்கள். ஒப்பந்த காலம் நிறைவடைந்த நிலையில் எங்களது சங்கத்தின் வளாகத்தில் எங்களது மக்களுக்கு நன்மை பயக்கும் எந்த செயற்பாட்டையும் நாங்கள் செய்ய முடியும் என்றனர்.

leb

திரிப்போலியில் ஹமாஸ் தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

March 6, 2026

லெபனானின் வடக்கு நகரமான திரிப்போலியில் (Tripoli) மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் தளபதி வாசிம் அத்தல்லா அலி (Wasim Attallah

har3

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் தேசிய பராமரிப்புக் கொள்கை பரிந்துரை

March 6, 2026

பெண்களின் உழைப்பை மதிக்கும் ஒரு நியாயமான சமூகத்தையும், பாதுகாப்பான பொருளாதாரத்திற்கான தேசிய பராமரிப்புக் கொள்கையினையும் நிறுவுதல் மிகவும் அவசியமாகும் எனப்

1

அமெரிக்காவை கண்டிப்பதற்கு அரசு அச்சப்படுகிறது – எம்.பி. உதுமாலெப்பை

March 6, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் சட்டவிராேத நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபை கண் இருந்தும் குருடர் போன்று பார்த்துக்கொண்டிருக்கிறது. அதேபோன்று

anu

மத்திய கிழக்கு மோதல்; ஜனாதிபதி விசேட ஊடகவியலாளர் சந்திப்பு

March 6, 2026

தற்போதைய மத்திய கிழக்கு மோதலின் போதும் சர்வதேச ரீதியிலான எந்தவொரு மோதல்களின் போதும் நாம் நடுநிலை வகிக்கும் நிலைப்பாட்டிலே இருந்தோம்.

Gramajo

டொராண்டோ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் மொன்றியலில் கைது!

March 6, 2026

டந்த வருடம் ஜூலை மாதம் டொராண்டோவில் இடம்பெற்ற கொலைக் குற்றத்துடன் தொடர்புடையதாக தேடப்பட்டு வந்த 24 வயதுடைய பிரையன் ஃபுவென்டெஸ்

sss

கனேடிய சுற்றுலாப் பயணி அவுஸ்திரேலியாவில் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!

March 6, 2026

அஸ்திரேலியாவில் ஜனவரியில் உயிரிழந்த கனேடிய சுற்றுலாப் பயணி, டிங்கோ தாக்குதலால் ஏற்பட்ட காயங்களுக்குப் பிறகே நீரில் மூழ்கி இறந்ததாக செய்திகள்

saroja

மாத்தறையில் சர்வதேச மகளிர் தினம் – அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

March 6, 2026

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 8ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் மாத்தறையில் இடம்பெறவுள்ளது. அரசியலில்

jeevan

உயிரிழந்த இளம்பெண் உடல் துஷ்பிரயோகம்: அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும்

March 6, 2026

நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையொன்றில் உயிரிழந்த இளம்பெண்ணின் உடல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த

don

அடுத்த கட்டத்தை நோக்கி ஈரானுக்கு எதிரான போர்…

March 6, 2026

ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை அமைப்புகளைக் குறிவைத்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை அமெரிக்கப் படைகள் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி

e

உயர்தர தொழிற்கல்விப் பிரிவுக்கு விண்ணப்பங்கள் கோரல்

March 6, 2026

2026/2027 ஆம் ஆண்டுக்கான 12 ஆம் தர தொழிற்கல்விப் பிரிவு பாடநெறிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி,

ship

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு

March 6, 2026

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க – இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல்

suz

கடலில் காணாமல் போனோரை தேடும் பணி முன்னெடுப்பு

March 6, 2026

யாழில் கடலில் காணாமல் போனோரை தேடும் பணியில் சுழியோடிகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், பாலைதீவு திருவிழாவுக்கு ,இன்று