சென்னை:
இரட்டைமலை சீனிவாசனின் நினைவு நாளையொட்டி சென்னை ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், வெளிநாட்டில் பயிலும் மாணவர் பாரதிதாசனின் கல்வி உதவித்தொகை விவகாரம் குறித்து விரிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
திருமாவளவன் பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
-
நிதி ஒதுக்கீடு மற்றும் நிலுவைத்தொகை: நடப்பாண்டில் அயல்நாட்டில் பயிலும் 360 மாணவர்களுக்கு அரசு ரூ. 131 கோடியை உதவித்தொகையாக வழங்கியுள்ளது. மாணவர் பாரதிதாசனுக்கு முந்தைய திமுக ஆட்சியில் முதலாம் ஆண்டுச் செலவாக ரூ. 36 லட்சம் வழங்கப்பட்டது. தற்போது இரண்டாம் ஆண்டிற்கு ரூ. 12 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ரூ. 24 லட்சமும் விரைவில் வழங்கப்படும் என ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் தன்னிடம் நேரில் உறுதியளித்துள்ளனர்.
-
அரசு நடைமுறைகள்: சம்பந்தப்பட்ட வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்திற்கு அரசு தரப்பிலிருந்து மின்னஞ்சல் வாயிலாகக் கடிதம் அனுப்பப்பட்டு விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மற்ற மாணவர்கள் பின்பற்றும் அதே அரசு நடைமுறைகளைத்தான் பாரதிதாசனும் பின்பற்ற வேண்டும். இதில் அவரைத் தனிப்பட்ட முறையில் வஞ்சிக்கவோ பழிவாங்கவோ அரசுக்கு எந்த உள்நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.
-
விமர்சகர்களுக்குப் பதிலடி: ‘8 தலித் அமைச்சர்கள் இருந்தும் ஒரு மாணவன் கல்வி பயிலச் சிரமப்படுகிறான்’ எனக் குற்றஞ்சாட்டுபவர்கள், அப்படிப் பேசுவதற்கான தங்களது உண்மையான உள்நோக்கத்தையும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
-
புதிய தலைமைச் செயலகம்: மக்களின் கருத்துக்கு மாறாகப் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டிவிட முடியாது; இது குறித்து அரசு மக்களின் உணர்வுகளைப் பரிசீலிக்கும்.
-
செயதியாளர் சந்திப்பில் பரபரப்பு: பாரதிதாசன் விவகாரம் குறித்துச் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வியெழுப்பியதால் கோபமடைந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்ற திருமாவளவன், சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து முந்தைய ஆட்சியில் அந்த மாணவருக்கு நிதி ஒதுக்குவதில் இருந்த நிர்வாகச் சிக்கல்கள் குறித்த ஆதாரங்களைத் தனது செல்போனில் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
அமைச்சர் வன்னி அரசு நேற்றைய தினம் இந்த விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனக் கூறியிருந்த நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவரான திருமாவளவனும் அதிகாரிகளின் தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொண்டு அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
Hashtags:
#Thirumavalavan #VCK #Bharathidasan #ScholarshipIssue #AdiDravidarWelfare #TNPolitics #TamilNaduNews #BreakingNewsTamil