மலைப்பாம்புடன் அழகிப் போட்டியில் நடனமாடிய இளம் பெண்!

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மார்ச் மாதம் 20ஆம் திகதி கொழும்பு ராயல் மாஸ் எரீனா வளாகத்தில் பிரபல ஒப்பனை கலைஞர் ஒருவரால் ஏற்பாடு செய்யப்பட்ட “CJ Royal New Year Prince & Princess – 2026” அழகிப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. போட்டியின் ஒரு அங்கமாக, குறித்த இளம் பெண் உயிருள்ள மலைப்பாம்பு ஒன்றை வைத்து நடனமாடியுள்ளார்.

வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 30 (1) (f) பிரிவின் கீழ், பாதுகாக்கப்பட்ட ஊர்வன இனமான மலைப்பாம்பை (Python molurus) காட்சிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

குறித்த பெண் அந்த மலைப்பாம்பை புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து 25,000 ரூபா வாடகைக்கு பெற்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்ததும் அதனை மீண்டும் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (24) கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண், கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் மற்றும் மலைப்பாம்பை வாடகைக்கு வழங்கிய நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பெல்லன்விலவில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருவதோடு, இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் மே மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

rus

948 ட்ரோன்களால் 24 மணித்தியாலங்களில் உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல்

March 25, 2026

உக்ரேன் மீதான போர் ஆரம்பமாகி நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், முன்னொருபோதும் இல்லாத வகையில் ஒரே நாளில் 948 ட்ரோன்களைப்

uni

சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டிக்கக் கோரி யுனிசெப் அமைப்புக்கு கடிதம்!

March 25, 2026

இஸ்ரேலிய பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்களை இலக்கு வைத்து ஈரான் நடத்தி வரும் கண்மூடித்தனமான ஏவுகணைத் தாக்குதல்களைப் பகிரங்கமாகக் கண்டிக்குமாறு ஐக்கிய

Baby death

தனியார் காணியொன்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு

March 25, 2026

மீகஸ்வெவ, பள்ளியாகொடல்ல பகுதியில் உள்ள தனியார் காணியொன்றிலிருந்து பெண் சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீகஸ்வெவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலைத்

ci

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது

March 25, 2026

சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டு, வரி செலுத்தாமல் விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற சுமார் 15 மில்லியன்

a1

உருவாக்க நிலை செயற்கை நுண்ணறிவால் பெண்கள் அதிகம் பாதிப்பு?

March 25, 2026

உருவாக்கநிலை செயற்கை நுண்ணறிவால் (Generative AI) ஆண்களை விட பெண்கள் அதிக பணியிடத்து அபாயத்தை எதிர்கொன்கின்றனர் என்பதை சர்வதேச தொழிலாளர்

mis

மலைப்பாம்புடன் அழகிப் போட்டியில் நடனமாடிய இளம் பெண்!

March 25, 2026

சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளி ஒன்றின் அடிப்படையில், பாதுகாக்கப்பட்ட உயிரினமான மலைப்பாம்புடன் நடனமாடிய இளம் பெண் ஒருவரை வனஜீவராசிகள் பாதுகாப்பு

pothu

சுகாதாரத் தொழிலாளி பொத்துவில் முதல் கிழக்கு ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவனி

March 25, 2026

பிரதேச சபை செயலாளரின் மனித நேயக் கவனத்துக்கு கொண்டுவரப்படவேண்டிய விடயமாக, 2025ஆம் ஆண்டு 7, 8 மற்றும் 9வது மாதங்களில்

5

சுவிஸ் தூதுவருடன் இளைஞர் விவகார அமைச்சர் விசேட சந்திப்பு

March 25, 2026

இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் கலாநிதி சிரி வோல்ட் (Dr. Siri Walt) மற்றும் இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்

heat

மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கடும் வெப்பநிலை

March 25, 2026

நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என

6

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட தம்பதியினரின் உடல் எச்சங்கள்!

March 25, 2026

கோவிட் காலத்தில் (ஆறு ஆண்டுகளுக்கு முன்பு) காணாமல் போன தம்பதியினரின் உடல்கள், கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்லம்பிட்டிய, கம்பிபிட்டிய வத்தை

semma

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி முக்கிய ஆலோசனை

March 25, 2026

செம்மணி மனித புதைகுழி அகழ்வு குறித்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளார். ஐ.நாவின் நிரந்தரவதிவிடப் பிரதிநிதி

mata

மத்தல விமான நிலையத்தை வளைகுடா விமான நிறுவனங்கள் மாற்று போக்குவரத்து மையமாகப் பயன்படுத்தத் திட்டம்!

March 25, 2026

மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை (MRIA) ஒரு