கொழும்பு நகரத்திற்குள் நுழையும் வாகனங்களுக்கான நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கொழும்பு மாநகர சபை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் கூறுகையில், மறு அறிவிப்பு வரும் வரை இந்த முடிவு உடன் நடைமுறைக்கு வருகிறது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் மோதலின் விளைவாக நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு கொழும்பு மாநகர சபையின் நிதிக் குழு இந்த முடிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. கொழும்பு நகரத்திற்குள் நுழைந்து வாகனங்களை நிறுத்துபவர்களிடமிருந்து நிறுத்தக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய உலகளாவிய நெருக்கடியால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொள்வதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலையிலேயே நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்க நிதிக் குழு ஒப்புதல் அளித்துள்ளது என கூறியுள்ளனர்.