‘மறுமலர்ச்சிக்கான பாதை’ ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

வடக்கு மாகாணத்தில் வீதிக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பயன்படுத்திச் செயற்படுத்தப்படும் ‘மறுமலர்ச்சிக்கான பாதை’ திட்டத்தின் கீழ், ‘ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதி’ மேம்படுத்தல் மற்றும் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நிகழ்வு, அச்சுவேலி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் இந்நிகழ்வு நடைபெற்றது.

வரி நீங்கலாக சுமார் 680 மில்லியன் ரூபா மதிப்பீட்டில், 6.03 கிலோ மீற்றர் நீளத்துக்கு இவ்வீதி முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது. துரித கதியில் முன்னெடுக்கப்படவுள்ள இவ்வீதிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, 12.05.2027 அன்று மக்கள் பாவனைக்காக மீளக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் ஆரம்பத்தில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து, வீதிப் புனரமைப்புக்கான பெயர்ப்பலகையை அமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்து, நிர்மாணப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,

கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் தமது சொந்தத் தேவைகளுக்கும், அரசியல் இலாபங்களுக்காகவுமே வீதிகளை அபிவிருத்தி செய்தனர். ஆனால், தற்போதைய அரசாங்கமே மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து வீதிகள், பாலங்கள் மற்றும் இறங்குதுறைகளை அபிவிருத்தி செய்து வருகின்றது. நான் யாழ். மாவட்டச் செயலாளராகக் கடமையாற்றிய காலத்தில் எவையெல்லாம் சாத்தியமற்ற கனவுகளாக இருந்தனவோ, அவை இன்று இக் காலப்பகுதியில் நனவாகி வருகின்றன.

இன்று இப்பகுதி மக்களுக்கு மிக மகிழ்ச்சிக்குரிய நாள். ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதியைத் திருத்த வேண்டும் எனப் பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும், நீண்ட காலமாக அது சாத்தியப்படாமலே இருந்தது. அந்தக் கனவு இப்போதைய அரசாங்கத்தின் காலத்தில் நடைமுறைக்கு வருகின்றது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க வடக்கு மக்கள் மீது விசேட கரிசனையுடையவர். அவர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதே, எமது மக்களின் துயரங்களை அறிந்தவர். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய அக்காலப்பகுதியில், அவர் தனது பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாண மக்களுக்கும் நிதி ஒதுக்கியிருந்தார். அந்தளவு தூரம் எமது மக்கள் தொடர்பில் அக்கறை கொண்டவர். எனவே, அவர் நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராக உள்ள இக்காலத்தில், எமது மாகாணத்தின் அபிவிருத்திகளைச் சிறப்பாகச் செய்ய முடியும். இவ்வாய்ப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, வலி.கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தி.நிரோஷ், யாழ். மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் குரூஸ், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

m5

பெருந்தோட்ட துறைப் பிரதான தொழிற்சங்கங்கள் மே தின கூட்டங்களை நடத்தவில்லை?

April 29, 2026

பெருந்தோட்ட துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான தொழிற்சங்கங்கள், இந்த ஆண்டு மே தின பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்துவதில்லை என தீர்மானித்துள்ளன.

arrest

இலங்கையில் பிரான்ஸ் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் கைது

April 29, 2026

பிரான்ஸ் நாட்டு பெண்ணொருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில், வாடகை வாகன சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட

m

ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் வழங்கல்

April 29, 2026

402 ஆயுர்வேத, சித்த மற்றும் யுனானி மருத்துவப் பட்டதாரிகளுக்கு உள்ளகப் பயிற்சி நியமனக் கடிதங்கள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை

g

விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் ; வவுனியா மாவட்ட குழுக் கூட்டம்

April 29, 2026

வவுனியா மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த முக்கிய மீளாய்வுக் கூட்டம், மாவட்டச் செயலகத்தில்

cha

“வன்முறைச் செயல்கள் ஒருபோதும் வெற்றி பெறாது” – அமெரிக்க நாடாளுமன்றத்தில் சார்ள்ஸ்

April 29, 2026

அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய மன்னர் சார்ள்ஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (28) சிறப்புரை ஆற்றினார். சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி

ro

“இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” – ஈரானுக்கு மீண்டும் ட்ரம்ப் எச்சரிக்கை

April 29, 2026

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், “இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது” என அமெரிக்க ஜனாதிபதி

rob

விமான நிலையத்தில் பணியாற்ற மனித உருவிலான ரொபோக்கள்!

April 29, 2026

ப்பானின் விமானப் போக்குவரத்துத் துறையில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்கும் முயற்சியாக, டோக்கியோவின் பரபரப்பான ஹனெடா விமான நிலையத்தில் மனித

Death-2

தெல்லிப்பழையில் ஒன்லைன் கேமிற்கு அடிமையான மாணவன் தற்கொலை!

April 29, 2026

யாழில் மாணவர் ஒருவர் புதன்கிழமை (29) தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்த சம்பவமானது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தெல்லிப்பழை – வீமன்காமம்

aup

ஜனாதிபதியின் கவனத்திற்கு செல்கிறது தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்

April 29, 2026

ரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட

ke

கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக அடையாள ஆர்ப்பாட்டம்

April 29, 2026

எமது பூர்வீக நிலத்தில் இராணுவம் தேங்காய் பறிக்கிறது. நாம் வீதியில் நின்று பார்த்துக்கொண்டிருக்கின்றோம் கேப்பாபிலவு இராணுவ பிரதான வாயிலுக்கு முன்பாக

chemmani

செம்மணி புதைகுழிக்குள் சந்தேகத்திற்குரிய மண் – மண்ணை அரித்து எடுக்கும் பணிகள் ஆரம்பம்

April 29, 2026

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது ஒரு என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அதனை சுத்தம் செய்யும் பணிகள்

manivannan

அருச்சுனாவின் துப்பாக்கியை பறிக்க வேண்டும் – மணிவண்ணன் கோரிக்கை

April 29, 2026

குற்றவியல் வழக்குகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ள ஒருவருக்கு கைத்துப்பாக்கி வைத்திருக்க அனுமதி வழங்க முடியாது என சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.