மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை வழங்குவதற்கு இலங்கைக்கு மருத்துவக் குழு ஒன்றை ஜப்பானின் வெளிநாட்டு உதவி நிறுவனம் அனுப்பியுள்ளது.
மருத்துவக் குழுவின் சுமார் 30 உறுப்பினர்கள் நேற்று புதன்கிழமை (03) டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டனர்.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் அதிகாரிகள் இவர்களை வழியனுப்ப வந்தனர்.
இதன்போது, “எங்களுக்குத் தேவையான நேரத்தில் எங்கு வேண்டுமானாலும் நீங்கள் முன்வந்து நீங்கள் உதவி செய்த விதத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என இலங்கைத் தூதர் தெரிவித்தார்.
மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு எங்கள் உதவி வழங்க விரும்புகிறோம்” என மருத்துவக் குழுத் தலைவர் இவாஸ் கிச்சிரோ தெரிவித்தார்.
கடும் அனர்த்தத்தை சந்தித்த சிலாபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு சிகிச்சை அளிக்கவுள்ளது.