நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நேற்றிரவு மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால், குறித்த வீதியூடான போக்குவரத்து முழுமையாக தடைப்பட்டிருந்ததாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் நுவரெலியா பொலிஸாரின் உதவியுடன் ஒரு மணி நேரத்தில் மரத்தை முழுமையாக வெட்டி அகற்றியுள்ளனர்.
வாகனங்களை பழமையான மரங்களுக்கு அடியில் நிறுத்த வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தி உள்ளனர்.