யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் இருந்து மணல்காட்டிற்கு சுற்றுலா சென்றவர்களை சிவில் உடையில் நின்ற பொலிஸார் தாக்கியுள்ளார்கள்.
சிவில் உடை மட்டுமன்றி மேல் ஆடைகள் இல்லாது மது அருந்தியவாறு இருந்த காங்கேசன்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பொலிஸார் மேற்கோண்ட தாக்குதலில் படுகாயமடைந்த இருவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.