கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா தேரர்களைச் சந்தித்து மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கலந்துரையாடியது.
கண்டிக்கு விஜயம் செய்த இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஆயர்கள் குழு ஒன்று, சியாம் மகா நிகாயவின் மல்வத்ததை பீட மகாநாயக்கர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்கர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரைச் சந்தித்து, நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் மதங்களுக்கிடையிலான சகவாழ்வு குறித்தும், சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டது.
சியாம் மகா நிகாயாவின் அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்கர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் துணைப் பதிவாளர் பண்டித மகாவெல ரத்தனசார ஆகியோரும் இந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர்.