கண்டி மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் மண்சரிவு காரணமாக கண்டி ஹந்தான-உடுவெல சாலையில் பல இடங்கள் நீரில் மூழ்கி மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் இந்திக ரணவீர சாரதிகளை எச்சரித்துள்ளார்.
கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம், இந்த சாலையில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.
குறிப்பாக இரவில் இந்த சாலையில் வாகனம் ஓட்டுவது மிகவும் ஆபத்தானது என்பதால், சாரதிகள் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுமாறு கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொள்கிறது.