மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலையில் உள்ளோம்

நாட்டில் இன்று மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகார போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கொழும்பு – மட்டக்குளி பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,

தற்போதுள்ள முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வந்து, நீதி நியாயம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது. ஆனால் அரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய முறைமை மாற்றத்தில், கொலை கலாச்சாரம் பரவலடைந்து, கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.

போட்டிக்காக கொலைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகள் வெளியே சென்று சேவையாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று நாடு பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் விடுத்து, அரசாளுகையில் சர்வாதிகார போக்கை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றது.

அரசை மையமாகக் கொண்ட சர்வாதிகார கட்டமைப்பை உருவாக்கி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த வெலிகம தவிசாளர், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகக் கூறி, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்து பூர்வமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆனாலும் இறுதியில் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்படாததால் அவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார். ஜகத் விதானாவுக்கு கூட உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த உயிர் அச்சுறுத்தல்களை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை. ஜகத் விதான தாமகவே பாராளுமன்றத்தில் இதனை வெளிக்கொணர்ந்தார்.

இது குறித்து ஜகத் விதான கருத்து வெளியிட்ட போது, பொலிஸ் மா அதிபர் நேரடியாகவே அவரை குற்றவாளியாக்கியுள்ளார். எதிர்க்கட்சியைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் உயிருக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். பாதுகாப்பை உறுதி செய்யுமாறு சபாநாயகருக்கு எழுத்துபூர்வமாக அறிவித்தும், வேண்டுகோள் விடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை.

நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஏதேனும் நடந்தால், அரசாங்கமே பொறுப்புக் கூற வேண்டும். பொய்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தக் கொலைகாரர்கள், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்கள் அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களை மேற்கொண்டு வரும் குழுக்களுடன் ஐக்கிய மக்கள் சக்தியினருக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை என்றார்.

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா

kesa

பாதாள உலகக் குழுத் தலைவர் கொலை வழக்கு:’கெசல்பெத்தர பத்மே’ விசாரணைக்காலம் அதிகரிப்பு

March 6, 2026

கொழும்பு நீதவான் நீதிமன்றக் கூண்டுக்குள் வைத்து, பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கனேமுல்ல சஞ்சீவ’வைச் சுட்டுக் கொலை செய்ய முயன்ற

nor

வடக்கின் சமர் ஆரம்பம்

March 6, 2026

உலகெங்கும் வாழும் யாழ். கல்வி நிறுவனங்களின் பழைய மாணவர்களாலும், விளையாட்டு ரசிகர்களாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும்

iri

கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டனர் IRIS Bushehr கப்பல் இருந்த பணியாளர்கள்!

March 6, 2026

இலங்கை கடல் எல்லைக்கு அருகே நங்கூரமிட்டிருந்த ஈரானின் ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த பணியாளர்களில் 204 பேரை இலங்கை கடற்படையினர்

Judment

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது; எதிரான மனு

March 6, 2026

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது

road-accident-1fbe3bd4f584940d0e9afe28e5117426-1

கிளிமடுச்சேனை விபத்தில் இரண்டு சிறுவர்கள் பலி!

March 6, 2026

புத்தளம், மதுரங்குளிய பொலிஸ் பிரிவின் கிளிமடுச்சேனை பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்த விபத்தில், 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளிமடுச்சேனை பகுதியைச்

v

அரசை பாதுகாக்கும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை நீக்கவேண்டும் – மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம்

March 6, 2026

மட்டக்களப்பு மாநகரசபையில் அரசை பாதுகாக்கும் பயங்கராத தடுப்பு சட்டத்தினையும் பயங்கரவாத தடைச்சத்தினையும் நீக்கவேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

sen

சர்வதேச படுகொலைகள் பற்றிப் பேசுகின்றோம் செஞ்சோலையில் கொல்லப்பட்ட குழந்தைகளுக்கு நீதி எங்கே?

March 6, 2026

செஞ்சோலையில் விமான தாக்குதல் மூலம் மோசமாக கொல்லப்பட்ட பெண் குழந்தைகளுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம்

le

இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான லெபனான் மக்கள் இடம்பெயர்வு

March 6, 2026

லெபனான் மீது இஸ்ரேல் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வான்வழி மற்றும் தரைவழித் தாக்குதல்கள் காரணமாக இதுவரை 3 இலட்சத்திற்கும் அதிகமான

doha

டோஹாவின் வான்பரப்பில் இஸ்ரேலின் ஏவுகணைகள் முறியடிப்பு!

March 6, 2026

கட்டார் தலைநகர் டோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள்

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த