மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவாரின் மரணத்தில் மர்மம்?

இந்தியாவின் மகாராஷ்டிர மாநில துணை முதல்வராக இருந்த அஜித் பவார், ஜனவரி 28 அன்று காலை புனேவில் உள்ள தனது சொந்த தொகுதியான பாராமதிக்கு உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்திற்கு சென்றபோது அவரின் தனிவிமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இதில் அஜித் பவார் உட்பட விமானத்தில் இருந்த அவரது பாதுகாவலர், 2 விமானிகள், விமான பணிப்பெண் என 5 பேர் உயிரிழந்தனர். அஜித் பவாரின் துணை முதல்வர் பதவி அவரின் மனைவி சுனேத்ரா பவாருக்கு வழங்கப்பட்டது.

நடப்பு உள்ளாட்சி தேர்தலில் அஜித் பவரின் தேசியவாத காங்கிரஸ், பல இடங்களில் எதிரணியில் உள்ள சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்தது.

எனவே பிரசாரங்களில் அஜித் பவார் தான் அங்கம் வகிக்கும் பாஜக கூட்டணியை எதிர்த்தே பேசி வந்தார். பாஜக உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார்.

இந்த நிலையில் அஜித் பவாரின் மரணத்தில் எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பியுள்ளன. விபத்து நடந்த அன்றே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விபத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுப்பினார்.

உத்தவ் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அஜித் பவார் மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சஞ்சய் ராவத் கூறுகையில், “பாஜகவின் ஊழல்கள் குறித்த ஒரு ரகசிய கோப்பு தன்னிடம் இருப்பதாக ஜனவரி 15 அன்று அஜித் பவார் தெரிவித்திருந்தார். அதை வெளியிடப்போவதாகவும் கூறியிருந்தார். அவர் பேசிய 10 நாட்களுக்குள் இந்த விபத்து நடந்துள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், அஜித் பவார் மீண்டும் சரத் பவாருடன் இணையத் திட்டமிட்டிருந்ததாகவும், இது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால் இந்தச் சதி நடந்திருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

விபத்தில் சிக்கிய அந்த விமானத்திற்கு முறையான பராமரிப்பு சான்றிதழ் இல்லை. கடைசி நேரத்தில் விமானி மாற்றப்பட்டது ஏன்? என இதுபோன்ற பல குழப்பங்கள் நிலவுவதாக சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அமோல் மித்காரியும் பேசியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் விஜய் வடேட்டிவார் கூறுகையில், “அஜித் பவாரின் உடல் அடக்கம் கூட இன்னும் முழுமையாக முடிவடையவில்லை, ஆனால் அதற்குள் அவரது மனைவி சுநேத்ரா பவார் துணை முதல்வராகப் பதவி ஏற்றுக்கொண்டார்.

அனைவருக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அவசரம் இருந்தது. மகாராஷ்டிராவின் 80 சதவீத மக்கள் இந்த மரணத்தில் மர்மம் இருப்பதாகவே நம்புகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

சரத் பவார் இதனை ஒரு விபத்து என்று கூறினாலும், மற்ற எதிர்க்கட்சிகள் இதனை ஒரு பெரிய அரசியல் சதியாகவே பார்க்கின்றன. இது குறித்து உயர்மட்ட விசாரணை தேவை எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

h

புயலை எதிர்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு

March 5, 2026

‘டித்வா’ புயலை எதிர்கொள்வதற்கான முழுமையான தயார்படுத்தல்கள் இல்லாமை குறித்துப் பூரண ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கையிடவும், அதற்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை

arrest

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற இருவர் கைது

March 5, 2026

இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகப் பணத்தை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் ஓய்வுபெற்ற பிரதம எழுதுவினைஞர் ஒருவரை இலஞ்ச

rain

சில பகுதிகளில் பிற்பகல் மழை

March 5, 2026

ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், அத்துடன் அம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் சில

ir

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கப்பலில் 80 சடலங்கள்!

March 5, 2026

இலங்கை கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து சுமார் 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை

sou

தென்னிலங்கையில் இளம் பெண் கழுத்தறுத்து கொலை – பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்

March 5, 2026

தென்னிலங்கையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். காலி, கஹதுடுவ

kamo

ஈரானிய உச்சத் தலைவர் கமேனியின் இறுதிச்சடங்கு ஒத்திவைப்பு

March 5, 2026

ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானில் பெரும் அரசியல் மாற்றங்கள்

iran

மேற்கு ஆசியாவில் போர் தொடரும் – ஈரான் திட்டவட்டம்

March 5, 2026

மேற்கு ஆசியாவில் மோதல் 5 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என்றும் போர் தொடரும் எனவும்

vijitha hera

பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்

March 5, 2026

மத்திய கிழக்கின் பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இதன்படி

ind

இந்திய மீனவர்கள் உதவி செய்தும் கரை திரும்பாத காங்கேசன்துறை மீனவர்கள்

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை – ஊரணிப் பகுதியிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களை, இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக

gun

வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு

March 5, 2026

மத்துகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை

chi

அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா!

March 5, 2026

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில் சீனா மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ளது. சீன வெளியுறவு அமைச்சர்

vijitha

அமைச்சர் விஜித ஹேரத் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவிற்கு இரங்கல்

March 5, 2026

ஈரானின் ஆன்மீக உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவையொட்டி, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக அமைச்சர் விஜித