மகரகம நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையத் தொகுதியொன்றில் இன்று ஞாயிற்றுக்கிழமை (08) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டை தீயணைப்புப் பிரிவின் 04 வாகனங்கள் விரைவாக ஸ்தலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.