பௌத்த தேரர்களின் ஒழுக்கப் பிரச்சினைகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தைக் கொண்ட “தர்ம நீதிமன்றம்” ஒன்றை மீண்டும் நிறுவுவதற்காக, 1931ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க பௌத்த அற நிலையங்கள் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
மாத்தறையில் திஹகொட மிதெல்லவல விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வு இன்று (27) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.