போர்க்கப்பல் சீன கடற்படையில் இணைப்பு

பலகட்ட சோதனைகளுக்கு பின், ‘புஜியன்’ என்ற நவீன விமானம் தாங்கி போர்க்கப்பலை, சீனா தன் கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது. சீனா, ‘லியோனிங், ஷான்டாங்’ என்ற இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கொண்டுள்ளது.

இந் நிலையில் மூன்றாவதாக, ‘புஜியன்’ என்ற மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடிய விமானம் தாங்கி போர்க்கப்பலை, பலகட்ட சோதனைகளுக்கு பின், கடற்படையில் முறைப்படி நேற்று இணைத்தது.

ஹைனான் மாகாணத்தின் சான்யா கடற்படை தளத்தில் நடந்த நிகழ்ச்சியில், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இந்த கப்பலின் சேவையை துவக்கி வைத்தார். 2024 மே மாதத்தில், புஜியன் போர்க்கப்பலின் முதல் சோதனை நடந்த நிலையில், தற்போது அது கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

‘லியோனிங், ஷான்டாங்’ விமானம் தாங்கி போர்க்கப்பல்களில், ‘ஸ்கி – ஜம்ப்’ என்ற முறையில் விமான ஏவுதல் நடக்கிறது. புஜியன் போர்க்கப்பலில் மின்காந்த உந்துவிசை அமைப்பு வாயிலாக ஏவுதல் நடக்கிறது. இந்த போர்க்கப்பலில் அதிகளவில் ஆயுதங்கள் எடுத்துச்செல்ல முடியும். மேலும், கனரக விமானங்களையும் இதிலிருந்து ஏவ முடியும்.

சீ னாவின் முதல் கடற்படை விமா னம் தாங்கி கப்பலான லியோனிங் முன்னாள் சோவியத் யூனியனின் தயாரிப்பாகும். முதல் இரு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை விட, புஜியன் போர்க்கப்பல் மிகப்பெரியது. தொழில்நுட்ப ரீதியாக, புஜியன் கப்பல் அமெரிக்காவின் போ ர்டு கப்பலின் ஏவுதல் அமைப்பை நெருங்கி உள்ளது.

இருப்பினும், அணுசக்தி வாயிலாக இயங்குதல், மிகப்பெரிய அளவு மற்றும் மேம்பட்ட ஏவுதள வடிவமைப்பு ஆகிய காரணங்களினால், அமெரிக்காவின் போர்டு கப்பலே இன்னமும் உலகின் மிகவும் சக்தி வாய்ந்த, திறன் மிக்க விமானம் தாங்கி கப்பலாக கருதப்படுகிறது.

asela

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத்

March 6, 2026

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே

jey

மத்திய கிழக்கு பதற்றம்; ஈரான் வௌிவிவகார அமைச்சருடன் ஜெய்ஷங்கர் கலந்துரையாடல்

March 6, 2026

ஈரானை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த

Iris

ஈரானுக்குச் சொந்தமான கப்பலை திருமலை துறைமுகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை

March 6, 2026

ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அக்கப்பலில் இருந்த 208

Rohini

வைத்தியசாலை பிரேத அறையில் பெண் உடல் துஷ்பிரயோகம்: குற்றவாளிகளுக்கு கடுமையகத் தண்டிக்க வேண்டும்

March 6, 2026

வைத்தியசாலையொன்றில் பிரேத அறையில் இருந்த பெண்ணின் உடல் துஸ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் உரிய

Indi

இருபதுக்கு – 20 உலகக் கிண்ணம்: இறுதிப் போட்டியில் இந்தியா

March 6, 2026

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான இந்தியா தகுதி

Selva

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது – செல்வம் அடைக்கலநாதன் எம்.பி

March 6, 2026

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு ‘மௌனப் பேரழிவு’ தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக,

w

வளிமண்டலத்தில் அதிகரிக்கும் காற்று மாசுபாடு

March 5, 2026

கொழும்பு நகரின் வளிமண்டலத்தில் காற்று மாசுபாட்டின் அளவு அதிகரித்துள்ளதாகச் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறிப்பாகச் சிறுவர்களின் ஆரோக்கியத்தில்

cid

மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சாலே?

March 5, 2026

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, 2019

cu

இருளில் மூழ்கியது கியூபா

March 5, 2026

கியூபாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு மின்சாரம் தடைப்பட்டு பல பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் பற்றாக்குறை

sh

இரண்டாவது ஈரானிய கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது!

March 5, 2026

மத்திய கிழக்கில் தொடரும் பதற்றங்களுக்கு மத்தியில் கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் இரண்டாவது ஈரானிய கப்பல் நங்கூரமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

zo

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தால் அர்ச்சுனாவிற்கு எதிராக மனு

March 5, 2026

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன்

jud

சட்டத்தரணிக்கு 12 வருட சிறைத்தண்டனை

March 5, 2026

போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12