போராட்டங்களின்றி பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளோம்

“தேசிய மக்கள் சக்தியின் ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிட்டது போல பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை போராட்டங்களின்றி அதிகரித்துள்ளோம் . எதிர்வரும் 10ஆம் திகதி நிச்சயமாக 1750 ரூபாய் நாற்சம்பளம் கிடைக்கும்” என பெருந்தோட்ட உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியினை நிறைவு செய்து வெளியேறும் 400 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை (02) ஹட்டன் டீ.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“ சம்பள அதிகரிப்பை தேசிய மக்கள் சக்தி அதிகரித்தது போல விரைவில் மலையக மக்களுக்கான காணி உறுதியும் நிச்சயமாக வழங்கப்படுவதோடு மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றி வந்தவர்கள் இப்போது எங்களை விமர்சனம் செய்கின்றார்கள். விமர்சனத்திற்கு நாம் அஞ்சுவதில்லை

மேலும் கடந்த காலத்தில் கல்வித்துறையில் அதிக அளவில் அரசியல் தலையீடுகள் காணப்பட்டது. அரச நியமனம், அரச அதிகாரிகளுக்கு தனித்துவமாக பணியாற்ற தடையிருந்தது ஆனால் நாங்கள் சுதந்திரமாக செயற்பட இடமளித்துள்ளோம். கடந்த காலங்களில் சிறந்த கல்வியாளர்கள் அரசியல் தலையீட்டால் தங்களது தகமைக்கேற்ற திறமைக்கேற்ற பதவிகளை வகிக்க முடியவில்லை. ஆனால் எங்களுடைய தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லை. ஆகவே தற்போது போதைப்பொருள் மாப்பியாக்களை கைது செய்ய முடிகிறது.

கல்வி, மலையக சமூக விடிவின் இரு கண்கள். பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழ் பெற்றுச்செல்லும் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகிறேன்.

கல்வித்துறையிலும் அரச சேவையிலும் அரசியல் தலையீடு இல்லை என்ற போதும் அதிகாரிகள் தங்களது சேவையை சரியாக மக்களுக்கு செய்யாது விடத்து எங்களது தலையீடு நிச்சயம் இருக்கும்.” என்றார்.

1

சர்வதேச பாடசாலை ஒன்றில் போத்தலில் குளிசைகள்; மாணவிகள் பாதிப்பு

March 5, 2026

வென்னப்புவ பகுதியிலுள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் மர்மமான முறையில் குளிசைகள் கலவை செய்யப்பட்ட

sh

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல்?

March 5, 2026

இலங்கையை நோக்கி மற்றுமொரு ஈரானிய கப்பல் ஒன்று வருகை தந்துக்கொண்டிருப்பதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று

dau

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டம்

March 5, 2026

ஒன்ராறியோவின் கோழிப் பண்ணையாளர்களின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் நான் கலந்து கொண்தையிட்டுப் பெருமைப்படுகிறேன் என ஒன்ராறியோவின் முதல்வர் டக் பேர்ட்

WhatsApp Image 2026-03-05 at 12.42.39

கனடாவின் பிராம்டன் நகரமும் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றது!

March 5, 2026

பிராம்டன் நகரம் யுனைடெட் வே கிரேட்டர் டொரான்டோ (United Way Greater Toronto) அமைப்பின் உள்ளூர் தலைவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பதில்

arrest

பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

March 5, 2026

கொழும்பு – கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டலங்க பகுதியில், பெருமளவான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று

dea

களனி கங்கையில் நீராடிய சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் மாயம்!

March 5, 2026

கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேபார்க் உணவகத்திற்கு அருகிலுள்ள களனி கங்கையில் நீராடச் சென்ற இருவரில் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்

go

தங்க விலை மீண்டும் உச்சத்தில்!

March 5, 2026

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளியின்

per

இலங்கையில் தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம் – பெற்றோலிய கூட்டுத்தாபனம்

March 5, 2026

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ele

இன்று நேபாளத்தில் பொதுத்தேர்தல்!

March 5, 2026

நேபாளத்தில் கடந்த ஆண்டு இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் போராட்டத்திற்குப் பிறகு, புதிய நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் இன்று (5) பலத்த

Poli

சட்டவிரோத எரிபொருள் சேகரிப்பு: சுற்றிவளைப்புகள் தீவிரம்

March 5, 2026

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைச் சேகரித்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்த நபர்களை இலக்கு வைத்து

Sri lanka

ஐசிசியுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பேச்சு!

March 5, 2026

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் நிர்வாகத்தை இடைக்காலக் குழுவொன்றின் கீழ் அல்லது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி ஒருவரின் கீழ் கொண்டு வருவது குறித்து

har

ஹார்முஸ் நீரிணையில் சிக்கித்தவிக்கும் 20,000 மாலுமிகள்…

March 5, 2026

ஹார்முஸ் நீரிணையில் நடந்த நிகழ்வுகள் காரணமாக சுமார் 20,000 மாலுமிகள் சிக்கியுள்ளதாக ஐ.நா.வின் சர்வதேச கடல்சார் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.