படோவிட்ட பகுதியில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக ஹேஷ் ரக போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
படோவிட்ட பொலிஸ் சோதனைச் சாவடி உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே இந்தச் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, ஒரு கிலோ 24 கிராம் ஹேஷ் ரக போதைப்பொருளைத் தம் வசம் வைத்திருந்த நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 22 வயதுடையவர் எனவும், அவர் கல்கிசை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.