கொழும்பு, ஆகஸ்ட் 21:
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இன்று (21) காலை பொலிஸ் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார்.
மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு (Summons) அமைவாகவே அவர் இவ்வாறு சமூகமளித்துள்ளார்.
விசாரணை அதிகாரிகளிடம் அவர் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த விசாரணை தொடர்பான மேலதிக தகவல்கள் அல்லது விவரங்கள் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.