பொதுமக்களை விட அனர்த்தத்தால் எதிர்க்கட்சியே நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள் – பிமல் ரத்நாயக்க

இயற்கை அனர்த்தத்தால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இவர்களின் நிலைமையையிட்டு கவலையடைகிறோம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்துள்ள நாவலபிட்டி – நுவரெலியா புகையிரத பாதை புனரமைப்பு பணிகளை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையை தொடர்ந்து ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தத்தால் மலையக புகையிரத பாதைகள் பாரியளவில் சேதமடைந்துள்ளன. புகையிரத பாதைகளை விரைவாக புனரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகையிரத திணைக்கள சேவையாளர்கள், இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன்; சேதமடைந்துள்ள புகையிரத பாதைகள் தற்போது கட்டம் கட்டமாக புனரமைக்கப்படுகின்றன. வெகுவிரைவில் இந்த பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.

ஜனாதிபதி விடுத்த அறிவிப்புக்கமைய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இழப்பீடு வழங்கப்படும்.இயற்கை வளங்களை அழித்து குடியிறுப்புக்களை அமைத்தால் அதன் பிரதிபலன் பாரதூரமானதாக அமையும் என்பதற்கு தற்போதைய நிலைமை ஒரு எடுத்துக்காட்டாக காணப்படுகிறது.

மலைகள், ஆறுகளை அண்டிய பகுதிகளில் குடியிறுப்புக்களை அமைப்பது குறித்து இனி கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும். தற்போதைய நிலைமை எதிர்காலத்தில் தோற்றம் பெறாத வகையில் நிலையான தீர்மானங்களை செயற்படுத்த வேண்டும்.

அனர்த்தத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ளதை காட்டிலும் எதிர்க்கட்சியினர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். ஊடக சந்திப்புக்களை நடத்திக் கொண்டு குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் மீது அக்கறை இருக்குமாயின் எதிர்க்கட்சியினர் ஊடகங்களுக்கு மத்தியில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டிருக்காமல் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இந்தளவுக்கு கீழ்த்தரமாக செயற்படுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.இவர்களின் நிலைமை கவலைக்குரியது என்றார்.

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

ci

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சிகரெட்டுகளுடன் இந்தியர் உட்பட இருவர் கைது

March 5, 2026

சட்டவிரோத விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 220 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இந்திய நாட்டவர் ஒருவரும், நுவரெலியாவைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த

Death-2

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து விழுந்தவர் பலி

March 5, 2026

ஓடிக்கொண்டிருந்த ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்பத்துறை (IT) நிபுணர் ஒருவர், கால் வழுக்கி ரயிலுக்கு அடியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக

aj

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு

March 5, 2026

இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு, “மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்” என்ற கருப்பொருளின் கீழ்

up

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் வல்லுறவு ; இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

March 5, 2026

தன் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்ணின் சடலத்திற்கு பாலியல் ரீதியான இழுக்கு ஏற்படுத்தியதாக கூறப்படும் அதிர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடையவர்களை

sh22

காணாமல் போன காங்கேசன்துறை ஊரணி மீனவர்கள் இந்தியாவில் மீட்பு

March 5, 2026

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு மீனவர்கள், தமிழ்நாட்டின் அரியமான் கடற்பரப்பில்