தமிழக பா.ஜ., தொண்டர்களுடன் இணைந்து, பிரதமர் மோடி, பொங்கல் பண்டிகை கொண்டாட உள்ளார்.
தமிழகத்தில் ஜன., 15ல் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை, பிரதமர் மோடி தமிழகம் வந்து, பா.ஜ.,வினர் உடன் கொண்டாட முடிவு செய்துள்ளார்.
திருப்பூர், ஈரோடு என, கொங்கு மண்டலத்தில் உள்ள ஏதேனும் ஒரு மாவட்டத்தில், உள்ளூர் மக்களுடன் இணைந்து, பொங்கல் கொண்டாட உள்ளார். அவருடன், ஒரே சமயத்தில், 10,000 மகளிர் பொங்கல் வைக்க, தமிழக பா.ஜ.,வினர் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., மாநில நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘பிரதமர் மோடி, ஜன., 10 அல்லது 12ல் தமிழகம் வந்து பொங்கல் கொண்டாட வாய்ப்புள்ளது. ‘தேர்தல் சமயத்தில் மோடியின் பொங்கல் கொண்டாட்டம், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரை உற்சாகப்படுத்தும் வகையில் அமையும்’ என்றார்.