‘பைசன்’ – பிரம்மாண்ட வெற்றி

கடந்த மாதம் 17 ஆம் தேதி ‘பைசன்’ திரையரங்குகளில் ரிலீசான நிலையில், இப்படத்தின் 25 நாளை நேற்றைய தினம் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

கடந்த மாதம் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் வெளியானது ‘பைசன்’. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான இப்படம் பலத்தரப்பில் இருந்தும் பாராட்டுக்களையும், மிகப்பெரிய வரவேற்பினையும் குவித்துள்ளது. நடிகர் துருவ் விக்ரமிற்கு ‘பைசன்’ மிகப்பெரிய வெற்றி படமாகவும், திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்தும் படைப்பாகவும் அமைந்துள்ளது. இந்நிலையில் தியேட்டர்களில் வெளியாகி 25 நாட்களை கடந்த இப்படத்தின் வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி ‘பைசன்’ திரையரங்குகளில் வெளியான நிலையில், நேற்றைய தினம் படம் வெளியாகி 25 நாட்கள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடினர். இயக்குனர் மாரி செல்வராஜ், அமீர், துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் கேக் வெட்டி இதனை செலிபிரேட் செய்தனர். இது தொடர்பான புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
இப்படத்தின் வசூல் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தற்போது வரை உலகளவில் ரூ. 80 கோடி கலெக்ஷனை இப்படம் கடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பைசன்’ அர்ஜுனா விருது வென்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவானது. தென் தமிழகத்தில் நடக்கும் அரசியல் பிரச்சனைகள், இதனால் அங்குள்ள இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை ஆகியவை குறித்து இப்படத்தில் பேசியிருந்தார் மாரி செல்வராஜ்.

இப்படத்தில் கபடி வீரராக நடிப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உழைத்தார் துருவ் விக்ரம். அதன் பலனாக திரையில் அப்படியே மணத்தி கணேசனை பிரதிபலித்து இருந்தார். அவருடைய அப்பாவாக பசுபதி மற்றும் அமீர், லால், ‘அருவி’ மதன் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்திருந்தனர். மேலும் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோரும் நடித்திருந்த இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து இருந்தார்.

ஆரம்பத்தில் பைசனுக்கு மெதுவாக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தாலும், அடுத்தடுத்த நாட்களில் படம் பிக்கப் ஆகி விட்டது. அதோடு பலத்தப்பில் இருந்தும் படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்ததால், ரசிகர்களை வருகையின் அதிகரித்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவங்கி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை முக்கிய பிரபலங்கள் பலரும் பைசன் படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி தள்ளினார்கள். இதனையடுத்து தமிழ் சினிமாவின் முக்கியமான படைப்பாகவும் ‘பைசன்’ கொண்டாடப்பட்டது.

இதனிடையில் விரைவில் இப்படம் ஓடிடி தளத்தில் ரிலீசாக இருக்கிறது. அதன்படி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘ பைசன் காளமாடன் ‘ வரும் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. தியேட்டரை போன்று ஓடிடி ரிலீஸிலும் இப்படத்துக்கு அமோகமான வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையில் மாரி செல்வராஜ் தனது அடுத்த படத்தினை தனுஷ் நடிப்பில் இயக்கவிருக்கிறார். கர்ணனை தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்த காம்போ கூட்டணி அமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

gaze

மின்சார சபை மறுசீரமைப்புக்கான வர்த்தமானி வௌியீடு

March 6, 2026

இலங்கை மின்சார சபையின் பணிகள் மற்றும் கடமைகளை மறுசீரமைத்து, எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று

id

இந்தியா – ரஷ்யாவிடம் எண்ணெய் கொள்வனவு செய்ய அனுமதி

March 6, 2026

இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ரஷ்ய எண்ணெயை கொள்வனவு செய்வதற்கு அனுமதி அளிக்கும் வகையில், அமெரிக்கா இந்தியாவிற்கு 30 நாட்கள்

ajar

அண்டை நாடான அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

March 6, 2026

ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது.

kat

இந்தியாவில் கரை ஒதுங்கிய மீனவர்களைப் பாதுகாப்பாக மீட்க உறவினர்கள் கோரிக்கை!

March 6, 2026

இயந்திரக் கோளாறு காரணமாகக் கடலில் தத்தளித்து, இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு யாழ். மீனவர்களையும் பாதுகாப்பாக

kum

தூதரகத்தை மூடும் அமெரிக்கா

March 6, 2026

குவைத்தில் உள்ள தமது தூதரகத்தை விட்டு வௌியேறுவதற்கு அமெரிக்கா தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. இன்று வரை அந்த பணிகள் முன்னெடுக்கப்படுவதாக

har

சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு; ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க அரசாங்கம் யோசனை?

March 6, 2026

அதிபர் சேவை மற்றும் அரச சேவையின் பல துறைகளில் நிலவும் சம்பள முரண்பாடுகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இந்த ஆண்டில் சம்பள

Dengue

மீண்டும் தலைதூக்கும் டெங்கு!

March 6, 2026

மட்டக்களப்பு நகர் பகுதியில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா நோய்களின் தாக்கம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக

boa

நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு கடலில் மூழ்கியது!

March 6, 2026

இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டிருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கிய சம்பவம் சாய்ந்தமருது பகுதியில் பெரும்

Pee

பீல் பிராந்திய காவல்துறையின் மக்கள் சந்திப்பு!

March 6, 2026

எங்கள் தெற்காசிய கூட்டு ஐ.எஸ்.என்(South Asian Collective ISN) நடத்திய இரண்டாவது மக்கள் சந்திப்பு நிகழ்வு நெட்வொர்க்கிங் கற்றல் மற்றும்

WhatsApp Image 2026-03-06 at 12.04.15

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிச் சென்ற படகு விபத்து: ஒருவர் உயிரிழப்பு

March 6, 2026

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்கரைப் பிரதேசமான குருநகர் இறங்கு துறையிலிருந்து, பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய பெருநாளில் கலந்துகொள்ளச் சென்ற பக்தர்களின்

photo-collage.png (50)

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் திட்டம்!

March 6, 2026

ஒன்டாரியோவை உலகின் முன்னணி பேட்டரி உற்பத்தி மையமாக மாற்றும் எங்கள் திட்டத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்தோம். அதற்காக, விண்ட்சர்

nu

’ஹேஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது

March 6, 2026

சிவனொளிபாதமலை யாத்திரைக்காக வருகை தந்த இரு இளைஞர்கள், ‘ஹேஸ்’ என அழைக்கப்படும் போதைப்பொருளுடன் மஸ்கெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மஸ்கெலியா