பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தமிழ்க்கட்சிப்பிரதிநிதிகள் சந்திப்பு

மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுப்பது குறித்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

தந்தை செல்வாவின் 49 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (26) நடைபெற்ற தந்தை செல்வா நினைவுப்பேருரை நிகழ்வில் உரையாற்றுவதற்காக யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சனிக்கிழமை (25) மாலை 4.00 மணியளவில் சுமந்திரனின் யாழ் இல்லத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.

இச்சந்திப்பின்போது தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், அவ்வாக்குறுதியை நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக 13 ஆவது திருத்தத்தின் ஊடாக அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள மாகாணசபைகள் முறைமையை இயங்கச்செய்யவேண்டியது அவசியம் என இங்கு வலியுறுத்தப்பட்டதுடன் மாகாணசபைத்தேர்தல்களை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதை முன்னிறுத்தி தாம் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் இருதரப்பினரும் விளக்கமளித்தனர்.

அதற்கமைய மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும் நடவடிக்கைகளை வடக்கு மற்றும் தெற்கு அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் இவ்விடயத்தில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையிலான சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதுடன், எதிர்வருங்காலங்களில் அத்தரப்புடனும் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

IMG_20230726_150840_268 copy

போராட்டத்தை கைவிடப் பால் உற்பத்தியாளர் சங்கத்திற்குத் தமிழக அரசு கடிதம்

August 25, 2026

சென்னை: பேச்சுவார்த்தைக்கு அழைப்பு பால் கொள்முதல் விலையை உயர்த்தக் கோரிப் பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ள போராட்டம் மற்றும் அவர்களது கோரிக்கைகள்

images (10)

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 வழங்காதது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

August 25, 2026

சென்னை: வறுமை ஒழிப்பு தின நிகழ்ச்சி தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாளை அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும்

kerar-87781787577431

“அது நான்தான், அமைச்சர் கீர்த்தனா இல்லை!” – வைரல் வீடியோ பெண் விளக்கம்

August 25, 2026

சென்னை: சர்ச்சையை ஏற்படுத்திய வைரல் வீடியோ சமூக வலைதளங்களில் தமிழக அமைச்சர் கீர்த்தனா எனத் தவறாகக் கூறி, மேலைநாட்டு உடையில்

minister-sekar-babu

“முருகப்பெருமானே தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்!” – சேகர்பாபு எம்.எல்.ஏ.

August 25, 2026

சென்னை: அரசியலுக்கு ஆண்டவனைப் பயன்படுத்துவதில்லை சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு,

images - 2026-08-25T094725.133

பள்ளி, கல்லூரி கட்டடங்களில் இனி 3 வகையான ஸ்டிக்கர்: ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று (ஆகஸ்ட்

images - 2026-08-25T094908.235

மகளிர் இலவச பயணத்திட்ட விரிவாக்கம்: பா.ம.க. எம்.எல்.ஏ. சவுமியா அன்புமணி வரவேற்பு!

August 25, 2026

சென்னை: ‘வெற்றிப் பயணம்’ திட்டம் விரிவாக்கம் தமிழகத்தில் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ள மகளிர் கட்டணமில்லாப் பயணத்

images - 2026-08-25T093908.642

அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடவேண்டுமா? கொந்தளித்த ஆ.ராசா

August 25, 2026

சென்னை: அமைச்சரின் பேச்சும் ஆ.ராசாவின் விமர்சனமும் காருக்கு தேசியக்கொடி வந்துவிட்ட காரணத்தால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என

bharathiraja-rajmohan-2026-08-24-20-55-52

பாரதிராஜாவுக்குத் தேனியில் மணிமண்டபம்: அமைச்சர் ராஜ்மோகன் முக்கிய அறிவிப்புகள்!

August 25, 2026

சென்னை: ரூ.2.50 கோடியில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்குத் திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தேனியில் அமைக்கப்படும் எனத் தமிழ் வளர்ச்சி

dailythanthi_2026-08-24_146dsz5y_Anbil-mahesh copy

அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்!

August 25, 2026

சென்னை: லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளிக்க முடிவு முந்தைய ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு லஞ்சம் கொடுத்ததாக

kasthuri-1-2024-11-0308395fba104cc334646f143d18f661-4x3

இடைத்தேர்தலில் த.வெ.க. வென்றால் காங்கிரஸ் கூட்டணி முறிய வாய்ப்பு: பா.ஜ.க. நிர்வாகி கஸ்தூரி

August 25, 2026

கும்பகோணம்: கஸ்தூரியின் கோயில் தரிசனமும் செய்தியாளர் சந்திப்பும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்துக்கு வந்த பா.ஜ.க. மூத்த நிர்வாகி கஸ்தூரி, அங்குள்ள

U2-1024x620

“தைரியம் இருந்தால் அந்த மூன்று கோப்புகளை ஓபன் பண்ணுங்க!” – முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி சவால்

August 25, 2026

சென்னை: நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை பாரிமுனை ராஜா அண்ணாமலை மன்றத்தில், ‘போராளி ஓய்வதில்லை’ என்ற தலைப்பில் தி.மு.க.

1200-675-27473574-thumbnail-16x9-megamalai

மேகமலை விவகாரம்: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மலைவாழ் மக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை மனு!

August 25, 2026

தேனி: ஆட்சியரின் உத்தரவும் மக்களின் அதிர்ச்சியும் தேனி மாவட்டம், வருஷநாடு, மேகமலை உள்ளிட்ட 98 மலை கிராம மக்களை வெளியேற்றும்