பெரும்போக நெற்செய்கையை ஆரம்பிக்கும் முகமாக, கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கான நீர் நேற்று (24) காலை சுப வேளையில் திறந்துவிடப்பட்டது.
கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கையை மேற்கொள்வதற்காகவே இந்த முதல் நீர் திறக்கப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாயத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதான மதகை இயக்கி நீரை வெளியேற்றினர்.
இந்த நீரின் மூலம் கந்தளாய் வான் எல, அக்போபுர, ஜெயந்திபுர, தம்பலகாமம் போன்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களுக்குத் தொடர்ச்சியாக நீர் வழங்கப்படும்.