சென்னை:
முந்தைய திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ‘நான் முதல்வன்’ மற்றும் ‘புதுமைப்பெண்’ திட்டங்களின் பெயர்களைத் தவெக அரசு மாற்ற முனைவதற்கு, முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தவெக அரசின் அரசியல் நோக்கம் கொண்ட இந்தச் செயல்பாட்டை ஜனநாயக முறையில் எதிர்ப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
“திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் மாணவர்களுக்காகவும் மாணவர்களாலும் வடிவமைக்கப்பட்டவை. இந்த உணர்வுகளைக் குறிக்கோளாகக் கொண்டவர்களுக்குப் புரியப்போவதில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் நலத்திட்டங்களை ‘மக்களுக்குப் புரியவில்லை’ என மட்டம் தட்டிப் பெயர் மாற்றும் அரசியல் யுக்தியைத் தவெக அரசு கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கல்வித்துறையில் தவெக அரசு மேற்கொண்டு வரும் இத்தகைய மாற்றங்கள் மற்றும் பெயர் மாற்ற விவகாரங்கள், தற்போது தமிழக அரசியல் களத்தில் திமுக-தவெக இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
#AnbilMahesh #DMK #TVK #Vijay #ThalapathyVijay #NaanMudhalvan #PudhumaiPenn #TamilNadu #TamilNews #BMNews #PoliticalUpdate #BreakingNewsTN #SofaModelGovernment #Politics2026 #PoliticalDrama #TamilNaduPolitics #SchemeRenaming #TamilNaduNews #PoliticalAttack #Governance #TamilPolitics #Debate #TNPolitics #EducationReform #PublicPolicy