கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்பாக இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இஷாராவிடம் பிஸ்டல் துப்பாக்கியை மறைக்க ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், குறித்த சட்டத்தரணி கடவத்தை பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.